india

img

பிஎம் கேர்ஸ் நிதியில் வழங்கப்பட்ட தரம்குறைந்த வெண்டிலேட்டர்கள்... குருகோவிந்த் சிங் மருத்துவமனையில் நோயாளிகள் தவிப்பு....

சண்டிகர்:
பி.எம். கேர்ஸ் நிதியின் கீழ் வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்கள் மிகவும் தரம்குறைந்தவையாக உள்ளன; அவற்றை நோயாளிகளுக்கு பயன்படுத்த முடியவில்லை என்று பஞ்சாப் மாநிலத்தில் புகார் எழுந்துள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, பஞ்சாப் மாநிலத்திற்கு பி.எம். கேர்ஸ் நிதியிலிருந்துகடந்த ஆண்டு 250 வெண்டிலேட்டர் களை மத்திய அரசு வழங்கியது. சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட இந்த வெண்டிலேட்டர்கள் சரியாக இயங்கவில்லை என்று அப்போதே புகார்கள் எழுந்தன. எனினும் தொற்றுப்பரவல் குறைந்ததால், இவ்விஷயம் பெரிதாகவில்லை.ஆனால், கொரோனா தொற்றின் 2-ஆவது அலை வேகமெடுத்துள்ள நிலையில், பரித்கோட் நகரில் உள்ள குருகோவிந்த் சிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்ட 80 வெண்டிலேட் டர்களை மருத்துவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.

ஆனால், இயக்கத்துக்கு வந்த ஒரு சில மணி நேரத்திலேயே அவற்றில் சிக்கல் ஏற்பட்டதால், மருத்துவர்கள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர். நோயாளிகளுக்குவெண்டிலேட்டர் பொருத்தப்பட்டிருக்கும் நேரத்தில் சிக்கல் ஏற்பட்டால் அது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதால் அச்சமடைந்த அவர்கள், தற்போது அவற்றை பயன்படுத்தாமல் நிறுத்தி வைத்துள்ளனர். பிஎம் கேர்ஸில் வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்கள் தரமற்றவை என்பதே பிரச்சனைக்கு காரணம் என்றும் கூறியுள்ளனர்.வெண்டிலேட்டர்கள் இல்லாததால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள 300 கொரோனா நோயாளிகள் நிலை தற்போது கவலைக்கிடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

;