india

img

மத நல்லிணக்கமே தங்களின் அடையாளம் எனும் இந்தியர்கள்... வாஷிங்டனைச் சேர்ந்த ‘பியூ’ நிறுவன ஆய்வில் வெளியான உண்மை....

புதுதில்லி:
வாஷிங்டனைச் சேர்ந்த லாபநோக்கமற்ற அமைப்பான ‘பியூஆய்வு நிறுவனம்’ (Pew ResearchCenter) அண்மையில் இந்தியர் களின் மத சகிப்புத்தன்மை குறித்தஆய்வு ஒன்றை நடத்தி, அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது.அதில், பெரும்பாலான இந்தியர்கள் மத நல்லிணக்கமே தங்களின்அடையாளம் என்றும்; அனைத்துமதத்தினரும் ஒன்றாக இணைந்துவாழ வேண்டியது தங்களின் கடமைஎன்றும் கூறி ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற தங்களின் பாரம்பரியத்தை மீண்டும் பறைசாற்றியுள்ளனர்.
“பெரும்பாலான இந்தியர்கள், இந்தியாவில், மதச் சுதந்திரத்தை அனுபவிப்பதாக உணர்கிறார்கள். மத சகிப்புத்தன்மையை மதிக்கிறார் கள், எல்லா மதங்களுக்கும் மரியாதை செலுத்துவது தங்களின் கடமை என நினைக்கிறார்கள்” என்று ‘பியூ’நிறுவனம் கூறியுள்ளது. ஒவ்வொரு மத வாரியாக பார்த்தால், 85 சதவிகித இந்துக்கள் அனைத்து மதங்களையும் மதிப்பதுமிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளனர். அதுதான் ‘உண்மையானஇந்தியராக’ வாழ்வதற்கு அடிப் படை என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்து மதத்தின் அடிப்படையே கூட மற்ற மதங்களை மதிப்பதுதான் என்று 80 சதவிகித இந்துக்கள் குறிப் பிட்டுள்ளனர்.

முஸ்லிம்களிடம் இதே கேள்விஎழுப்பப்பட்டபோது, 78 சதவிகிதமுஸ்லிம்கள், பிற மதங்களை மதிப்பதுதான் இந்தியராக இருப்பதற்கான ஒரு முக்கிய அடிப்படை என்று தெரிவித்துள்ளனர். மேலும், பிற மதங்களை மதிப்பதுதான் முஸ்லிம்களின் அடையாளம் என் றும் 79 சதவிகித முஸ்லிம்கள் கூறியுள்ளனர். இப்படி பிற மதங்களை மதிப்பதுஒரு பக்கம் என்றாலும், இந்தியாவில் ஒருவரின் நண்பர்கள் பெரும்பாலும் அவரது மதத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்ற யதார்த்தமும் இந்த ஆய்வில் வெளிப்பட்டுள்ளது. 13 சதவிகித இந்தியர்கள் மட்டுமேகலப்பு நண்பர்கள் வட்டத்தை கொண்டிருப்பதாக கூறும் ‘பியூ’ ஆய்வு, இந்துக்களில் 47 சதவிகிதம் பேர் தங்கள் ‘நெருங்கிய நண்பர் கள்’ அனைவரும் இந்துக்களே என்றுகூறியிருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், 39 சதவிகித இந்துக்கள், தங்களுக்கு இந்துக்கள் மட்டுமே நண்பர்களாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். 61 சதவிகிதம் பேர் பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் தங்களுக்கு நண்பர்களாக இருப்பதாக கூறியுள்ளனர். 

44 சதவிகித முஸ்லிம்கள் தங்கள்மதத்தைச் சேர்ந்தவர்களின் வட்டாரத்தில் மட்டுமே தங்களுக்கு நண் பர்கள் உள்ளதாக கூறியுள்ளனர். 56 சதவிகித முஸ்லிம்கள் தங்களுக்கு பிற மதத்தைச் சேர்ந்தவர் களும் நண்பர்கள் என்றுதெரிவித்துள்ளனர்.கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை 56 சதவிகித கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்தைச் சேர்ந்தவர்களே தங்களுக்கு நண்பர்களாக என்று கூறியுள்ளனர். 44 சதவிகித கிறிஸ்தவர்கள் மட்டுமே பிற மதத்தவர்களும் தங்களுக்கு நண்பர்கள் எனக் கூறியுள்ளனர். வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்வதற்கு, இந்துக்களில் 67 சதவிகிதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுவே முஸ்லிம்கள் மத்தியில் எதிர்ப்பு 80 சதவிகிதமாக உள்ளது. சீக்கியர்களில் 59 சதவிகிதம் பேரும்,சமணர்களில் 66 சதவிகிதம் பேரும் பிற மதங்களைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை அவர்களில் 37 சதவிகிதம் பேர் மட் டுமே, பிற மதத்தவர்கள் உடனான திருமண உறவை வேண்டாம் என்றுகூறியுள்ளனர். முஸ்லிம்களை அண்டை வீட்டாராக ஏற்பதில் 36 சதவிகித இந்துக் கள் தங்களது விருப்பமின்மையைப் பதிவு செய்துள்ளனர். கிறிஸ்தவர் களில் 31 சதவிகிதம் பேரும், சமணர்களில் 54 சதவிகிதம் பேரும் முஸ்லிம்களை அண்டை வீட்டாராக ஏற்க தயாரில்லை. 

இவற்றுக்கு மாறாக, பவுத்தர் கள் மற்ற மதக் குழுக்களை சேர்ந்தவர்களை அண்டை வீட்டுக்காரர் களாக ஏற்றுக் கொள்ள அதிகபட்ச விருப்பம் தெரிவித்துள்ளனர். பவுத்தர்களில் 80 சதவிகிதம் பேர் முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர் அல்லது சமணர்களை அண்டை வீட்டுக்காரராக ஏற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். பாஜகவை விரும்பும் பெரும்பாலானோர் சரியான புரிதல் இல்லாதவர்களாகவோ, மத சகிப்புத்தன்மை அற்றவர்களாகவோ இருப்பார்கள் என்பது பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டாகவே இருந்து வந்தது.ஆனால், ‘பியூ’ ஆய்வு அதனை உறுதிப்படுத்தியுள்ளது.

ஏனெனில், பாஜக-வுக்கு வாக்களித்த இந்துக்களில் பெரும்பாலானோர் பிற மதத்தவரோடு கலந்துவாழத் தயாரில்லை என்பதை ஆய்வில் தெரிவித்துள்ளனர். 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த இந்துக்களில் 51 சதவிகிதம் பேர் மட்டுமேமுஸ்லிமை அண்டை வீட்டாராக ஏற்கத் தயார் எனக் கூறியுள்ளனர். ஒரு கிறிஸ்தவரை அண்டை வீட்டுக் காரராக ஏற்கத் தயார் என்று, 53 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.இதுவே மற்ற கட்சிகளுக்கு வாக்களித்த இந்துக்களில், முஸ்லிம் களை அண்டை வீட்டாராக ஏற்கத் தயார் என்று 64 சதவிகிதம் பேரும், கிறிஸ்தவர்களோடு கலந்து வாழ்வதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று 67 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர். இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய மூன்று பெரு மதங்களைச் சேர்ந்தவர்களுமே பெரியவர்களை மதிப்பது தங்கள்மத கொள்கைக்கு மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளனர். 

தனித்துவமாக விளங்கும் தென்னிந்தியா
வட இந்தியர்களைக் காட்டிலும் தெற்கில் உள்ள மக்கள் “அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களையும் தங்கள் நெருங்கிய நண்பர்களாக ஏற்றுக் கொள்கிறார்கள். தென் மாநிலங்களில் உள்ள இந்துக்களில் 31 சதவிகிதம் பேர் மட்டும்தான் (வடக்கேஇது 39 சதவிகிதம்), தங்கள் நெருங்கிய நண்பர்கள் அனைவரும் இந்துக்கள் என்று கூறியுள்ளனர். அதிகபட்சமானோர்- அதாவது, சுமார் 69 சதவிகிதம் இந்துக்கள், அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் தங்களது நெருங்கிய நண்பர்கள் (வடக்கே இது 61 சதவிகிதம்) எனக் குறிப்பிட்டுள்ளனர் என்றும் ‘பீயூ’ ஆய்வு கூறியுள்ளது.

;