india

img

இந்தியர்கள் ‘கைலாசா’வில் காலடி வைக்கத் தடை... தனது நாட்டு மக்களை(!) காக்கிறாராம் நித்தியானந்தா....

புதுதில்லி:
இந்தியாவில் பாலியல் வல்லுறவு, ஆள்கடத்தல், பணம் பறிப்பு, நில ஆக்கிரமிப்பு வழக்குகளில் சிக்கி, வெளிநாட்டுக்கு தப்பியோடியவர் சாமியார் நித்தியானந்தா. ஒரு கட்டத் தில், ஆஸ்திரேலியா அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதனை ‘கைலாசா’ என்ற பெயரில் தனி நாடாக அறிவித்ததுடன், அந்த நாட்டிற்குதானே அதிபர் என்று முடிசூட்டிக் கொண்டு, தனது சீட - கோடிகளுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

அவ்வப்போது சிவபெருமான், திருப்பதி வெங்கடாஜலபதி வேடங்களில் புகைப்படங்கள், வீடியோக்களையும் வெளியிட்டு வரும் அவர், தனது நாட்டிற்கு இந்தியர்கள் தொழில் தொடங்க வரலாம் என்றும் அழைப்பு விடுத்திருந்தார். அவர்களுக்கு தனி விமானம் இயக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் தீவிரம் அடைந்துள்ளதால் இந்தியா, ஐரோப்பிய யூனியன், மலேசியா, பிரேசில் என நோய்ப் பரவல் மிகுதியாக உள்ள நாடுகளிலிருந்து வரும் பக்தர்களுக்கு கைலாசாவில் இப்போது அனுமதி இல்லை என்று தடாலடியாக அறிவித்துள்ளார். கைலாசாவில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கும் அனைவரும் இந்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்நாட்டு மக்களுக்கு நித்தியானந்தா உத்தரவிட்டுள்ளார்.

;