india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்....

உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சஞ்சு தேவி மற்றும் பதேரி ஆகியோர் வெள்ளிப்பதக்கம் வென்றனர். 

                                        **************

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் மாவட்ட ஆட்சியரால்சீல் வைக்கப்பட்ட குடோனில் இருந்து தாது மணலை எடுத்துச் சென்றதாக விவி மினரல் உரிமையாளர் மற்றும் 5 ஓட்டுநர்கள் மீது  சிப்காட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

                                        **************

நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் குணமடைந்தோரின் விகிதம் 97.54  சதவீதமாக உள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

                                        **************

தொழிலாளர் சேமநல நிதி நிறுவனத்தில் கடந்த ஜுன் மாதம் 12 லட்சத்து 83 ஆயிரம் சந்தாதாரர்கள் இணைந்துள்ளதாக  மத்தியதொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

                                        **************

ஸ்பெயின் நோக்கி சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்று அட்லாண்டிக் கடலில் விபத்துக்குள்ளான நிலையில் அதில் பயணம் செய்தவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

                                        **************

சமூகவலைதளங்களில் தலிபான்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாகக் கூறி மருத்துவ மாணவர்உள்பட 14 பேரை அசாம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

                                        **************

வங்காள விரிகுடா கடற்பகுதியில் இந்தியா, இங்கிலாந்து  கடற்படைகளின் மூன்று நாள் கூட்டுப்பயிற்சியில் இருநாட்டு தரப்பிலும் நவீன போர்க்கப்பல்கள் பங்கேற்றுள்ளன.

                                        **************

ஆகஸ்ட் 23 திங்கட்கிழமை புனே ராணுவ விளையாட்டு பயிற்சி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஒலிம்பிக்கில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்றநீரஜ் சோப்ராவின் பெயரை புனேயில்உள்ள ராணுவ விளையாட்டு மைதானத்திற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சூட்டவுள்ளார்.

                                        **************

ஐதராபாத்தில் உள்ள தேசிய விலங்குகள் உயிரி தொழில்நுட்பவியல் கழகம் மற்றும் புனேயில்உள்ள தேசிய செல் அறிவியல் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை மத்திய மருந்துகள் ஆய்வக தரத்திற்குஉயர்த்த அரசு நடவடிக்கை மேற்
கொண்டுள்ளது. 

                                        **************

தமிழகத்தில் வன விலங்குகளின் தாக்குதலால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் உடைமைகளுக்கென இழப்பீட்டுத்தொகை உயர்த்தப்படும் என வனத்துறை அமைச்சர்  ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

;