india

img

கொரோனா மரணமும், எரியும் பிணங்களுமாகி விட்ட இந்தியா.... உலக ஊடகங்கள் உண்மையைத்தான் பிரதிபலிக்கின்றன..... சங்-பரிவாரங்களுக்கு மருத்துவ வல்லுநர் ஆஷிஷ் கே ஜா பதிலடி.....

புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கொடூரமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற் றுக்கு ஆளாகி வருகின்றனர். நாடு முழுவதும் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு ஒரு கோடியே 79 லட்சத்து 97 ஆயிரத்து 267 ஆகஅதிகரித்துள்ள நிலையில், இதுவரை ஒரு கோடியே 48 லட்சத்து17 ஆயிரத்து 371 பேர் குணமடைந் துள்ளனர். 

கொரோனாவால் பாதிக்கப் பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 29 லட்சத்து 78 ஆயிரத்து 709 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தத் தொற்றில் 16.55 சதவிகிதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண் ணிக்கை 2 லட்சத்து ஆயிரத்து 187 ஆக உயர்ந்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் 3 ஆயிரத்து 293 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 895 பேர், தில்லியில் 381 பேர், சத்தீஸ்கரில் 246 பேர், உத்தரப்பிரதேசத்தில் 264 பேர், குஜராத்தில் 170 பேர், கர்நாடகத்தில் 180 பேர், ஜார்க்கண்டில் 131 பேர்,ராஜஸ்தானில் 121 பேர், பஞ்சாப்பில் 100 பேர் என உயிரிழந்துள்ளனர். 

உரிய சிகிச்சை வசதி, ஆக்சிஜன்பற்றாக்குறை, தடுப்பூசி தட்டுப்பாடுகாரணமாக இந்த எண்ணிக்கை அடுத்துவரும் நாட்களிலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. தற்போதே நாடு முழுவதும் உள்ளசுடுகாடுகள் நிரம்பி வழிகின்றன. மயான ஊழியர்கள் இரவும் பகலுமாக பணியாற்றியும் பிணங்களை எரிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, தில்லி, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடகம், குஜராத் உள் ளிட்ட மாநிலங்களில் பிணங்களை எரிப்பதற்காக, உறவினர்கள் சுமார் 20 மணிநேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருக்கும் அவலம் நிலவுகிறது. ஊடகங்களிலும் இதுவே செய்திகளாக நிறைந்திருக்கின்றன. 

இதைப் பார்த்த சங்-பரிவாரங்கள், இந்தியாவில் கொரோனா மரணங்களை ஊடகங்கள் பூதாகரமாக்குவதாகவும், மோடி அரசை பலவீனப்படுத்துவதற்கான சதி இது என்றும் கூப்பாடு போடத் துவங்கியுள்ளன. கொரோனா சிகிச்சை தொடர்பான புகார்களை எழுப்புவோர் மீது வழக்குகள் போட்டும் மிரட்ட ஆரம்பித்துள்ளனர்.இந்நிலையில், பிரவுன் பல்கலைக் கழக பொதுச்சுகாதார பிரிவு நிபுணர் ஆஷிஷ் கே ஜா ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி, சங்-பரிவாரங்களின் இந்த கூப்பாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது:

‘இந்தியாவில் நிறைய திறன் இருக்கிறது. தடுப்பூசி தயாரிப்பில் உலகின் தலைநகரமாக இந்தியாதிகழ முடியும் என்று நான் தொடர்ந்துபேசி வருகிறேன். ஆனால், அதற்காககொரோனாவால் இறந்தவர்களை ஒரே சமயத்தில் எரியூட்டும் சம்பவங்களையும், தகன மேடைக்கு அருகேவரிசையாக பிணங்கள் காத்திருக் கும் அவலங்களையும் மறுக்க முடியாது. ஏனெனில் அவை இந்தியாவின் இன்றைய எதார்த்த நிலைதான். இதை நியாயமற்றது என்றோ, இந்திவின் பலவீனங்களை அம்பலப் படுத்துவது என்றோ நான் பார்க்கவில்லை. இந்தியாவில் எல்லாமே சரியாகப்போய்க் கொண்டிருக்கிறது, தவறுகளே நடப்பதில்லை என்று காட்டுவதுதான் தவறு. அது நமக்குஉதவவும் செய்யாது. இன்னொன்று அதில் உண்மையும் இல்லை. எனவே, கொரோனா செய்திகளைப் பொறுத்தவரை உலக ஊடகங்கள் நல்ல காரியம்தான் செய்து வருகின்றன. அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸ் உள்ளிட்ட இடங்களில் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்ட போதும் இதே போன்றுதான் அவை செயல்பட்டன. இந்தியாவிடம் பலமும் உள்ளது, பலவீனமும் உள்ளதுநாம் அனைத்தையும் தான் பார்க்க வேண்டும்.”இவ்வாறு ஆஷிஷ் கே ஜா கூறியுள்ளார்.

;