india

img

ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகம் அதிகரிப்பு.....

புதுதில்லி:
நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது குறித்தும் இதனால் நோயாளிகள் அவதிப்பட்டது குறித்தும் பல்வேறு செய்திகள் வெளியாகின. 

கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோரில் 15 சதவீதம் பேருக்கு மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்படுகிறது. மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்படும் அவர்களுக்கு செயற்கை சுவாசம்அளிக்க ஆக்சிஜன் சிலிண்டர் களின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.இந்தியா முழுவதும்காற்றில் இருந்து ஆக்சிஜனை பிரித்து எடுக்க சுமார் 500 ஆலைகள் செயல்படுகின்றன. இந்த ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் 85 சதவீத ஆக்சிஜன்,இரும்பு மற்றும் வாகன உதிரிபாக உற்பத்தி ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது. 15 சதவீத ஆக்சிஜன் மட்டுமேமருத்துவ மனைகளுக்கு செல்கிறது.

தற்போது 100 சதவீதஆக்சிஜன் சிலிண்டர்களையும் மருத்துவ பயன்பாட்டுக்கு அனுப்பி வைக்கமத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்கு ரயில்கள் மூலம் ஆக்சிஜன்சிலிண்டர்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. மேலும்50 ஆயிரம் டன் ஆக்சிஜனைஇறக்குமதி செய்யடெண்டர் வெளியிடப் பட்டுள்ளது.மத்திய தொழில் துறைஅமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  “கடந்த பிப்ரவரி இறுதி வார புள்ளிவிவரத்தின்படி மருத்துவ பயன்பாட்டுக்கு நாள்தோறும் 1,273 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம்செய்யப்பட்டது. கடந்த 17ஆம் தேதி புள்ளி விவரத்தின்படி நாள்தோறும் 4,739 மெட்ரின் டன் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த 6 வாரங்களில் மட்டும் ஆக்சிஜன் விநியோகம் 4 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;