india

img

மே மாதத்தில் மட்டும் 92 ஆயிரம் பேர் பலி.... ஏப்ரலை விட 2 மடங்கு அதிகரித்த கொரோனா உயிரிழப்பு.....

புதுதில்லி:
கொரோனா தடுப்பூசி போடும் பணிநாடு முழுவதும் விரிவடைவதற்குப் பதில்குறைந்து கொண்டே வருகிறது என்றால்,மற்றொரு புறத்தில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு ஒவ்வொரு வாரம் அதிகரித்து வருவதை புள்ளிவிவரங்கள் அம்பலப்படுத்துகின்றன.

குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதத்தைக்காட்டிலும், மே மாதத்தில் கொரோனா உயிரிழப்பு 2 மடங்கு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.உலகிலேயே கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது.அமெரிக்கா 5.84 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகளையும், பிரேசில் 4.48 லட்சம் இறப்புகளையும் பதிவு செய்த நிலையில், இந்தியாவில், 3 லட்சத்து 11 ஆயிரம் கொரோனா இறப்புகள் இந்தியாவில் பதிவாகி உள்ளன.உலக அளவிலான கொரோனா தொற்றுபாதிப்பு எண்ணிக்கையில் சுமார் 16 சதவிகிதம் பேர்களை தன்வசம் கொண்டிருக்கும் இந்தியா, உயிரிழந்தோரின் எண்ணிக்கையிலும் சுமார் 9 சதவிகிதத்தை பெற்றுள்ளது. இந்த எண்ணிக் கைதான் தற்போது உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த இரண்டு வாரங்களில், கொரோனா இறப்பு எண்ணிக்கை ஒருநாளைக்கு சராசரியாக 4 ஆயிரமாக இருந்தநிலையில், அது தற்போது நாளொன் றுக்கு 4,190 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் மே மாதத்தில் மட்டும்92 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்குப்பலியாகியுள்ளனர். ஏப்ரல் மாதத்தை விடஇது இரு மடங்கு அதிகமாகும். கொரோனா தொற்றின் முதல் அலைமொத்தமுமே ஒன்றரை லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டது என்றால், 2-ஆவது அலை துவங்கிய 2021 பிப்ரவரி இரண்டாவது வாரத்திலிருந்து, கடந்த மூன்றரை மாதங்களில் மட்டும் மேலும் ஒன்றரை லட்சம் பேர் இறந்துள்ளனர். இன்னும் குறிப்பாக சொன்னால், கடைசி 7 வாரங்களுக்குள் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம்பேர் உயிரிழந்துள்ளனர்.தற்போதுள்ள ஒரே ஆறுதல், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மே 6-ஆம் தேதி 4 லட்சத்து 14 ஆயிரம் பேர் என்று உச்சத்தில் இருந்தது, தற்போது 2 லட்சத்திற்கும் கீழாக குறைந்து வருவதும், குணமடைவோர் விகிதம் 89.26 சதவிகிதமாக அதிகரித்து வருவதும்தான்!இதனால் உயிரிழப்பு விகிதமும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

;