india

img

இந்தியாவில் இன்னும் 1 சதவிகிதம் பேருக்குக்கூட தடுப்பூசி போடவில்லை... மாநிலங்களவையில் நாடாளுமன்றக் குழு அறிக்கை....

புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட ஆரம்பித்து இரண்டு மாதங்கள் முடிந்து விட்ட போதும்,இன்னும் 1 சதவிகிதம் பேருக்குக் கூட முழுமையாகதடுப்பூசி போட்டு முடிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழுவே, இந்த உண்மையை ஒப்புக்கொண்டு, மாநிலங்களவையில் அறிக்கை அளித்துள்ளது.இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு, கோவாக் சின் (Covaxin), கோவிஷீல்டு (Covishield) ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி 16 முதல் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கும், மார்ச் 1 முதல்60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 45 வயதுக்கு உட்பட்டநாள்பட்ட நோயாளிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப் பட்டு வருகிறது. விரைவில், 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது.இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள- மார்ச் 15 வரையிலான புள்ளி விவரங்களின்அடிப்படையில், இதுவரை 3 கோடியே 29 லட்சத்து47 ஆயிரத்து 432 பேருக்கு மட்டுமே தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன என்று தெரியவந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா தலைமையிலான உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு மாநிலங்களவையில் இதுதொடர்பாக அறிக்கைஒன்றையும் தாக்கல் செய்துள்ளது.இந்நிலையில், இந்த அறிக்கையை முன்வைத்து,தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனத்துடன்செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

“இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.045 சதவிகிதம் மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 5 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஏற்றுமதிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் அரசு மக்களின் வாழ்க்கையுடன் விளையாடுகிறது. தடுப்பூசித் திட்டம் எதுவும்தெளிவாக இல்லை. அது முறையாக தொடங்கவில்லை” என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரானமணீஷ் திவாரி குற்றம் சாட்டியுள்ளார்.‘‘வெளிநாடுகளுக்கு 5.9 கோடி கொரோனா தடுப்பூசிகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது என்பதை எண்ணும்போது பெருமிதம் கொள்கிறேன். ஆனால்,இந்தியர்களுக்கு இதுவரை 3 கோடி கொரோனா தடுப்பூசிமட்டுமே போடப்பட்டுள்ளது என்பதில் ஏமாற்றமடைகிறேன்” என்று காங்கிரசின் மற்றொரு மூத்தத் தலைவரான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இவை ஒருபுறமிருக்க, இந்தியா அதிகம் பயன் படுத்தும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு, டென்மார்க், நெதர் லாந்து, நார்வே, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் எனஉலக நாடுகள் பலவற்றில் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய பாஜகஅரசு, கோவிஷீல்டு தடுப்பூசியால் கவலைக்குரிய விளைவுகள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளது. உலக சுகாதார நிறுவனமும் கோவிஷீல்டை பயன் படுத்தலாம் என்று நம்பிக்கை அளித்துள்ளது.

;