india

img

மத்திய பல்கலை.களில் இந்த ஆண்டு பொது நுழைவுத்தேர்வு இல்லை.....

புதுதில்லி:
கொரோனா தொற்று பரவலால்  மத்தியப் பல்கலைக்கழகங்களில் இந்த ஆண்டு பொது நுழைவுத்தேர்வு கிடையாது. 2021-22ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டு கடைப்பிடித்தபடியே நடைபெறும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

2021-22 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை செப்டம்பர் 30 ஆம்தேதிக்குள் முடிக்கப்படவேண்டும். அக்டோபர் 1 ஆம் தேதி முதல் கல்வியாண்டு தொடங்கப்பட வேண்டும். நடப்புக் கல்வியாண்டுக்கான தேர்வு (2020-21) கண்டிப்பாக ஆஃப் லைனில் (எழுத்துத் தேர்வு) அல்லது ஆன்லைனில் 2021 ஆகஸ்ட் 31 ஆம்தேதிக்கு மிகாமல் கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி நடத்தி முடிக்க வேண்டும்.12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூலை 31 ஆம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை தேர்வு முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏதும் ஏற்பட்டால், கல்வியாண்டு தொடங்கும் தேதி அக்டோபர் 18-ம் தேதிக்கு மாற்றி அமைக்கப்படலாம். மாணவர்களுக் கான கற்றல் முறை வழக்கம்போல் ஆன்லைன், ஆஃப் லைன் எனக் கலந்து கற்பிக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 2022-23ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத்தேர்வு அடிப்படையில் நடக்கவும் வாய்ப்புள்ளது என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.

;