india

img

அனைவருக்கும் இலவச தடுப்பூசித் திட்டம் செயல்படுத்துக.... மோடி அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்...

புதுதில்லி:
நாடு தழுவிய அனைத்து மக்களுக்குமான இலவசத் தடுப்பூசி திட்டம் மட்டுமே இன்றைய மிகப் பெரும் சுகாதார நெருக்கடி நிலையை எதிர்கொள்ள உதவும் என்றுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக் குழு செவ்வாயன்றுவிடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மத்திய அரசு புதிய தடுப்பூசிக் கொள்கையை திங்களன்று அறிவித்துள்ளது. இது, உருவாக்கிய மிக மிக மோசமான சுகாதார நெருக்கடியிலிருந்து எப்படியாவது தன்னை மீட்டுக் கொள்ள வேண்டும் என்றமத்திய அரசாங்கத்தின் மற்றொருமுயற்சியாக மட்டுமே இருக்கிறது.ஒட்டுமொத்த பொறுப்பு முழுவதை யும் மாநில அரசாங்கங்களின் தலையில் சுமத்தும் முயற்சியாகவே புதியதடுப்பூசிக் கொள்கை அமைந்துள்ளது.இந்தக் கொள்கை, தடுப்பூசி விற்பனையை தாராளமாக கட்டவிழ்த்துவிடுவது என்பதற்கும், தடுப்பூசி சப்ளை எந்தளவிற்கு இருக்கிறது என்பதை கணக்கில் கொள்ளாமல் அவற்றின் விலையை தாராளமாக நிர்ணயித்துக் கொள்ள அனுமதிப்பது என்பதற்குமே முக்கியத்துவம் அளிக்கிறது. போதுமான அளவு தடுப்பூசிகளின் சப்ளையை அதிகரிப்பதற்கு தேவையான எந்தவிதமான நடவடிக்கையையும் கடந்தஓராண்டு காலமாக மேற்கொள்ளா மல் மத்திய அரசு முற்றாக தோல்வி யடைந்துள்ளது. இந்த நிலையில், மத்திய அரசின் புதிய அறிவிப்புகள், உயிர்காக்கும் தடுப்பூசியை விலை கொடுத்து வாங்க முடியாத கோடிக்கணக்கான மக்களை, சுகாதார பாதுகாப்பில் இருந்து முற்றாக வெளியேற்றுவதாகும்.

மேலும், இதுவரையிலும் மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் இலவசமாகத் தான் வழங்கப்பட்டு வந்தன.தற்போது மாநிலங்கள், எந்தவிதமான விலை கட்டுப்பாடும் இல்லாததிறந்தவெளி சந்தையிலிருந்து மருந்துகளை வாங்கிக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளன. புதிய கொள்கையின் விளைவாக, தடுப்பூசி தயாரிப்பாளர்கள், தடுப்பூசி விலையினை தாங்களே தனிப்பட்ட முறையில் நிர்ணயித்து அறிவிப்பார்கள். இது நமது மிகப் பெரும்பான்மையான மக்களை, தடுப்பூசி பெறுவதிலிருந்து மிகவும் மோசமான முறையில் வெளியேற்றுவதற்கே இட்டுச் செல்லும்.

எனவே, மாநில அரசாங்கங்கள் தடுப்பூசிகளை வாங்குவதற்கு மத்திய அரசின் கருவூலத்திலிருந்து தான் நிதி அளிக்கப்பட வேண்டும்.மேலும் அரசாங்கத்தின் கொள்கையானது மிகப்பெரிய அளவிற்கு தடுப்பூசிகளை, உயிர் காக்கும் மருந்துக்களை பதுக்குவதற்கும், கள்ளச் சந்தையில் விற்பதற்குமே வழி செய்யும்.எனவே, ஒரு நாடு தழுவிய, அனைவருக்குமான, இலவச தடுப்பூசி திட்டம் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும். இதுதான் இந்தியாவின் பாரம்பரியம். இதுதான்இந்தியாவின் நீண்டகால சுயேட்சையான நடைமுறை.அதற்கு மாறாக, மத்திய அரசு தனது பொறுப்புகள் அனைத்திலிருந்தும் விலகிக் கொண்டு ஒரு மோசடியான கொள்கையை, பாரபட்சமான, சமத்துவமற்ற கொள்கையை அறிவித்திருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு குறிப்பிடவிரும்புகிறது. மத்திய அரசின் இத்தகைய செயல்பாடு, எந்தவிதத்திலும் பெருந்தொற்றை தடுத்து நிறுத்தஉதவாது; நமது மக்கள் எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய பொது சுகாதாரநெருக்கடி நிலையை தீர்ப்பதற்கு வழி செய்யாது. மாறாக, இத்தகைய ஒரு பாகுபாடான கொள்கையானது, பெருந்தொற்றின் பிடியில் மேலும் மேலும் அதிகமான இந்திய மக்களை சிக்கச் செய்வதற்கே இட்டுச் செல்லும்.நாடு தழுவிய, அனைவருக்கு மான இலவச தடுப்பூசி திட்டம் மட்டுமே பொது சுகாதார நெருக்கடி நிலையை எதிர்கொள்ள உடனடி தேவையான நடவடிக்கையாகும்.இவ்வாறு அரசியல் தலைமைக் குழு கூறியுள்ளது.

;