india

img

பாஜக என்னை திடீரென நீக்கியது ஏனென்று தெரியவில்லை... இந்துத்துவா பேர்வழி கபில் குஜ்ஜார் ‘வேதனை’

புதுதில்லி:
பாலியல் குற்றவாளிகள், மோசடிப் பேர்வழிகள், வன்முறையாளர்களின் புகலிடமாக பாஜக மாறி வருகிறது. பல்வேறுகுற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள், தங்களின் பாதுகாப்புக்காக பாஜக-வை நாடுவதும், பாஜக-வும் எந்த உறுத்தலும் இல்லாமல் அவர்களைக் கட்சியில் சேர்த்துக் கொள்வதும் வாடிக்கை ஆகிவிட்டது.

அந்த வகையில்தான், சில தினங்களுக்கு முன்பு கபில் குஜ்ஜார் என்பவரும் பாஜக-வில் இணைந்தார். ஆனால், அவரை அடுத்த சில மணி நேரத்திற்கு உள்ளாகவே பாஜக நீக்கிவிட்டது. இந்நிலையில், பாஜக-வின் இந்த நடவடிக்கை தனக்கு ‘வேதனை’ அளிப்பதாக கபில் குஜ்ஜார் ‘வருத்தப்பட்டு’ உள்ளார்.முஸ்லிம்களுக்கு எதிராக, மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக கடந்த 2019 இறுதியில் துவங்கி 2020 பிப்ரவரி வரை நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக தலைநகர் தில்லியில் உள்ள ஷாகீன் பாக்கில் நடந்தபோராட்டம் உலக அளவில் கவனம் பெற்றது. ஆயிரக்கணக் கான பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது இந்தப் போராட்டத்திற் குள் புகுந்து, முஸ்லிம்களுக்கு எதிராக மூன்றுமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியவர்தான் கபில்குஜ்ஜார். இவை எல்லாம் தெரிந்துதான் பாஜக அவரை கட்சியில் சேர்த்துக் கொண்டது. ஆனால், ஏனோ சேர்த்த சில மணி நேரத்திற்கு உள்ளாகவே அவரை நீக்கிவிட்டது.இதனைக் குறிப்பிட்டு குஜ்ஜார் வருத்தப்பட்டுள்ளார். பாஜகவில் இருந்து நான் ஏன் நீக்கப்பட்டேன் என்று தெரியவில்லை என்று அப்பாவி போல கூறியிருக்கும் அவர், கட்சியில் இல்லாவிட்டாலும், இந்துத்துவா கொள்கைகளுக் காக பாஜகவிற்கு உழைப்பேன் என்று சத்தியம் செய்துள்ளார்.

;