india

img

நாங்கள் இந்திய அரசுடன் ஒத்துப்போக முடியும் என்று நம்பவில்லை... கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதே எங்கள் கொள்கை.... மோடி அரசுக்கு டுவிட்டர் நிறுவனம் பதிலடி.....

புதுதில்லி:
கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதே எங்களின் கொள்கை; ஆனால், இவ்விஷயத்தில் இந்திய அரசுடன் ஒத்துப்போக முடியும் என்று நாங்கள் நம்பவில்லை என்று டுவிட்டர் நிறுவனம் அதிரடியான கருத்தை வெளியிட்டுஉள்ளது.

விவசாயிகள் போராட்டம் பற்றிய தவறானதகவல்கள் பரப்பினார்கள் என்று இந்திய அரசால் புகார் தெரிவிக்கப்பட்டுள்ள 1,178 கணக்குகளில், 500 கணக்குகளை இந்தியாவுக்குள் மட்டும் நிறுத்தி வைக்கிறோம் என்றும் டுவிட்டர்நிறுவனம் தெரிவித்துள்ளது.விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்போர் அனைவரையும் பாகிஸ்தான், காலிஸ்தான் ஆதரவாளர்கள் என்று பழிபோடும் மோடி அரசு, இவர்கள்தான் வேளாண் சட்டம் மற்றும், விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக டுவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூகவலை தளங்களில் தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்றும் குற்றம் சாட்டி வருகிறது. 

அந்த வகையில், ஆத்திரமூட்டும் வாசகங்களை பதிவு செய்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் 1178 பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் டுவிட்டர் கணக்குகளை நீக்கும்படி டுவிட்டர் நிர்வாகத்தை, அண்மையில் கேட்டுக் கொண்டிருந்தது.‘தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69-ஏ பிரிவின் கீழ், இந்திய அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என்று டுவிட்டர் நிறுவனத்தை மத்திய பாஜக அரசு மிரட்டி இருந்தது.“துணைப்பிரிவு (1) இன் கீழ் வழங்கப்பட்டவழிகாட்டுதலுக்கு இணங்கத் தவறும் பட்சத்தில் சமூக ஊடக தளத்தின் தலைவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்” என்று ஐ.டி சட்டம் பிரிவு 69ஏ (3) கூறுவதை வைத்தும் பயமுறுத்தி இருந்தது.இந்த சூழலில்தான், கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதே எங்கள் கொள்கை என்று துணிச்சலாக மத்திய அரசுக்கு டுவிட்டர் நிறுவனம் பதிலளித்துள்ளது.

சட்டவிரோதமாக கருத்துகள் பதிவிடப்படுவதாக புகார் வந்தால் நாங்கள், சம்பந்தப்பட்ட டுவீட், டுவிட்டர் விதிமுறைகளுக்கும், அந்தந்த நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கும் கீழ் உள்ளதா? என்று ஆராய்வோம்.ஒருவேளை ஒரு டுவீட், டுவிட்டர் நிறுவனத்தின் விதிமுறைகளை மீறியிருந்தால் அது உடனடியாக நீக்கப்படும். மாறாக, டுவிட்டர் நிர்வாகத்துக்கு உட்பட்டு டுவீட் இருந்து, சம்பந்தப்பட்ட நாட்டின் சட்டத்தை மட்டுமே மீறியிருந்தால், நாங்கள் அந்த நாட்டின் எல்லைக்குள் மட்டுமே டுவீட்டை நிறுத்தி வைப்போம்.தற்போது, இந்திய சட்டத்திற்கு எதிரான கணக்குகளைத் தடுக்க வேண்டும் என்பது, கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்கும் எங்கள் கொள்கைகளுக்கு எதிரானது. 

நாங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் இந்திய சட்டத்துடன் ஒத்துப்போகும் என்று நாங்கள் நம்பவில்லை. அந்த வகையில், பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்கும் எங்கள் கொள்கைகளுக்கு இணங்க, ‘இந்திய சட்டத்தின் கீழ் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை’ மீறியதாக கூறப்படும் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரின் கணக்குகளில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அவ்வாறு நடவடிக்கை எடுப்பது, இந்தியசட்டத்தின் கீழ் சுதந்திரமாக கருத்து தெரிவிப்பதற்கான அவர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகி விடும் என்று நாங்கள் நம்புகிறோம். 

மாறாக, 1,178 கணக்குகளைத் தடுக்குமாறு இந்திய அரசு கூறியதில் ஒரு பகுதியை500க்கும் மேற்பட்ட கணக்குகளை இந்தியாவிற்குள் மட்டும் தடுத்து நிறுத்தி இருக்கிறோம். இந்த  கணக்குகள் இந்தியாவுக்கு வெளியே தொடர்ந்து கிடைக்கும்.நாங்கள் சேவை செய்யும் நபர்களின் சார்பாக சுதந்திரமான கருத்துரிமைக்காக தொடர்ந்து வாதிடுவோம். அதேநேரம் இந்திய சட்டத்தின் கீழான விருப்பங்களையும் ஆராய்ந்து வருகிறோம். டுவிட்டருக்கும் பாதிப்புக்குஉள்ளான கணக்குகளுக்கும் இடையிலான உரையாடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.இவ்வாறு டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

;