india

img

கொரோனா தடுப்பூசி தயாரிக்க ஹைதராபாத் நிறுவனத்திற்கு ரூ.1,500 கோடி முன்பணம்....

புதுதில்லி:
பயாலாஜிக்கல்-இ நிறுவனம் டிசம்பர் மாதத்திற்குள் 30 கோடி கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் என்றும்இதற்காக ரூ.1500 கோடி முன்பணம் வழங்கப்பட்டுள்ளது என்றும் மத்திய சுகாதாரம்- குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய பாஜக அரசின் மெத்தனமான நடவடிக்கையால் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சனையில் மத்திய அரசு போதிய கவனம் செலுத்தி செயல்படவில்லை என்று மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியா தற்போது  கோவாக்சின் (பாரத் பயோடெக்), கோவிஷீல்டு (சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா) மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த ஸ்புட்னிக்  ஆகிய மூன்று தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் 30 கோடி கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்க ஐதராபாத்தைச் சேர்ந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பயாலாஜிகல்-இ என்ற நிறுவனம் தடுப்பூசிகளை தயாரிக்க ரூ.1,500 கோடியை முன்பணமாக மத்திய அரசு வழங்குகிறது.பயாலாஜிகல்-இ  உருவாக்கிய தடுப்பூசி ஒரு ஆர்.பி.டி புரத துணை அலகுதடுப்பூசி  ஆகும். இது அடுத்த சில மாதங்களில் கிடைக்க வாய்ப்புள்ளது. 2021 ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை பயாலாஜிகல் - இ  மூலமாக தடுப்பூசிகள்  தயாரிக்கப்பட்டு சேமிக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

;