india

img

தமிழகத்திற்கு வருகிறது உயர்மட்ட நிபுணர் குழு...

புதுதில்லி:
கொரோனா தொற்று குறித்து ஆய்வு செய்வதற்கு தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு உதவிசெய்ய உயர்மட்ட பன்னோக்கு நிபுணர் குழுவை மத்திய அரசு அனுப்புகிறது.

கேரளா, மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.இதனைத்தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கேரளா உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் அனுப்பியுள்ள கடிதத்தில், ஆர்டி-பிசிஆர் சோதனைகளை அதிகப்படுத்தி, கொரோனா தொற்றுபரவலை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று குறித்து ஆய்வு செய்வதற்கு தமிழகம், கேரளம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப், கர்நாடகம், மேற்கு வங்கம், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கும், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கும் உதவ உயர்மட்ட பன்னோக்கு நிபுணர் குழுவை மத்திய அரசு அனுப்புகிறது.

;