india

img

தடுப்பூசிகளை அதிகம் வீணாக்கியது ஹரியானா....

புதுதில்லி:
கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கியதில் ஹரியானா முதலிடத்தில் உள்ளது.இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.தொற்று பாதிப்பு களை தடுக்க அவசரகால தேவைக்காக தடுப்பூசிகளை பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது.  இதன்படி, கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய அரசு இதுவரை இலவச அடிப்படையில் 18 கோடி கொரோனா தடுப்பூசிகளை (17,93,57,860) மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கியுள்ளது. இவற்றில் வீணாக்கியது உள்பட 16 கோடியே 89 லட்சத்து 27 ஆயிரத்து 797 தடுப்பூசிகள் பயன் படுத்தப்பட்டு உள்ளன.  இதுபோக 90 லட்சம் தடுப்பூசிகள் அவர்களிடம் இருப்பில் உள்ளன.

கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கிய வகையில் ஹரியானா மாநிலம் முதலிடம் பிடித்து உள்ளது.  ஹரியானாவில் 6.49 சதவீதம் அளவுக்கு கொரோனா தடு ப்பூசிகள் வீணாக்கப்பட்டு உள்ளன.  இதனை தொடர்ந்து அசாம் (5.92 சதவீதம்) இரண்டாவது இடத்தில் உள்ளது.  மூன்றாவது இடத்தில் ராஜஸ்தான் (5.68 சதவீதம்) உள்ளது.இந்த பட்டியலில் மேகாலயா (5.92 சதவீதம்) 4வது இடத்திலும், பீகார் (5.20 சதவீதம்) 5-வது இடத்திலும் உள்ளன. 9-வதுஇடத்தில் தமிழகமும், பத்தாவது இடத்தில் நாக லாந்தும் உள்ளது.

;