india

img

விவசாயப் போராட்டத்திற்கு உலகளாவிய ஆதரவு..... குரல் கொடுத்த ரிஹானா, கிரெட்டா தன்பெர்க்.....

புதுதில்லி:
இந்தியாவில் விவசாயிகளின் கிளர்ச்சி என்பது உலகம் முழுவதும் பரபரப்பான தலைப்பாகி வருகிறது. போராட்டத்திற்கு ஆதரவாக குரல் எழுப்ப பல பிரபலங்கள் முன்வந்தனர். இப்போது பிரபல பாப் பாடகி ரிஹானாவும் சர்வதேச சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் உள்ளிட்ட பிரபலங்களும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஒருமைப்பாட்டை அறிவித்துள்ளனர்.

தில்லியில் இணைய தடை குறித்த சிஎன்என் தொலைக்காட்சி செய்திகளை ரிஹானா ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார், நாம் ஏன் இதைப் பற்றி பேசவில்லை என்று அதில் கேள்வி எழுப்பியுள்ளார். ட்விட்டரில் 100 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடரும் நிலையில், ரிஹானாவின் ட்வீட் மிகப்பெரிய பிரதிபலிப்பை உருவாக்கியுள்ளது. ரிஹானாவுக்கு ஆதரவாக பலர் கருத்து கூறியுள்ளனர். ஆனால், சங்க பரிவார் ஆதரவாளர்கள் அவரை தாக்கி பதிவிட்டுள்ளனர். பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் உட்பட பலர் ரிஹானா குறித்து கேலி செய்து ட்வீட் செய்துள்ளனர்.

சுற்றுச்சூழல் ஆர்வலரான பதின்ம வயது பெண் கிரேட்டா தன்பெர்க், பிரபல வழக்கறிஞரும் எழுத்தாளருமான மீனா ஹாரீஸ், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ் உள்ளிட்ட ஏராளமான உலக பிரபலங்கள் ஏற்கனவே இந்தியாவில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர். இதனால் எரிச்சலடைந்த பிரதமர் மோடி ‘பிரபலங்கள்  இதுபோன்ற ஆதரவு வெளிப்படுத்தல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும்’ கூறினார். ஆனால் உலக அளவில் விவசாயிகள் போராட்டத்துக்கு மேலும் மேலும் ஆதரவு அதிகரித்து வருவதையே   ரிஹானாவின் ட்வீட்டும். அதற்கான பின்னூட்டங்களாக 24 மணி நேரத்தில் பதிவான 2.7 லட்சம் மறு டுவீட்டுகளும், 6 லட்சம் லைக்குகளும் வெளிப்படுத்துகின்றன.விவசாயிகளின் போராட்டத்திற்கு சர்வதேச ஆதரவை விமர்சித்த டெண்டுல்கர் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு பாலிவுட் நட்சத்திரம் டாப்சி பன்னு பதிலடி கொடுத்துள்ளார். ‘ஒரு ட்வீட்டால் உங்கள் ஒற்றுமை சிதைந்துவிட்டால், உங்கள் சொந்த மதிப்புகளை நீங்கள் சரிபார்க்க வேண்டும்’ என்று டாப்சி ட்வீட் செய்துள்ளார்.

;