india

img

காலத்தை வென்றவர்கள் : விடுதலைப் போராட்ட வீரர் பிபின் சந்திரபால் நினைவு நாள்......

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பிபின் சந்திரபால் 1886- ல் காங்கிரஸில் சேர்ந்தார். அஸ்ஸாம்தோட்டத் தொழிலாளர்கள் கொடுமைப்படுத்தப்படுவது குறித்தும் சிலசமயம் அடித்தே கொல்லப்படுவது குறித்தும் 1896-ல் பிபின் போராடியதால் காங்கிரஸ் இந்த விஷயத்தைக் கையில் எடுத்தது. அப்போதைய அஸ்ஸாம் கமிஷனர் சர் ஹென்றி காட்டன் முயற்சியால் இந்த தீமைகள் விலகின. 1886-ஆம் ஆண்டுகல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிலும், 1887-ஆம் ஆண்டு சென்னை காங்கிரஸ் மாநாட்டிலும், 1904-ஆம் ஆண்டு மும்பை காங்கிரஸ் மாநாட்டிலும் கலந்து கொண்டார்.வங்கப் பிரிவினையை ஒட்டி தீவிர அரசியலில் ஈடுபட்டார். ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியை உணர்ந்து கொண்டார். அதை எதிர்த்துத் தீவிரமாகச் செயல்பட்டார். 1907-ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களிடையே சுதந்திர வேட்கையை ஏற்படுத்தினார். அவரது சொற்பொழிவுமக்களை மிகவும் ஈர்த்தது. மக்களிடையே நாட்டுப் பற்றையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். 

வந்தே மாதரம் இதழைத் தோற்றுவித்தவர்களில் பிபின் சந்திரபாலும் ஒருவர். வந்தே மாதரம் இதழில் ஆட்சியாளரை எதிர்த்து எழுதிய வழக்கில் அரவிந்தருக்கு எதிராக சாட்சி சொல்ல மறுத்ததால்ஆறு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது விடுதலை நாளைக்கொண்டாட முற்படும் போதுதான் வ. உ. சிதம்பரம்பிள்ளையும் சுப்ரமண்ய சிவாவும் கைது செய்யப்பட்டனர்.இளமையிலேயே இந்து சமூகத்தில் உள்ள கொடுமைகளை எதிர்த்தார். பெண் கல்வியை ஆதரித்தார். 1891-ஆம் ஆண்டு திருமணவயதை அதிகரிக்கச் செய்த சட்டத்துக்கு பிபின் மிகுந்த ஆதரவு அளித்தார். அதனால் பழமைவாதிகளின் விரோதத்தைப் பெற்றார்.பிபின் சந்திர பால் 1932 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் நாள் கல்கத்தாவில் மறைந்தார். 

;