india

img

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டுபிடித்துத் தாருங்கள்.... தில்லி காவல்நிலையத்தில் மாணவர் காங்கிரசார் புகார்....

புதுதில்லி:

கொரோனா தொற்றின் 2-ஆவது அலை தீவிரமாகியுள்ள நிலையில்,மத்திய அமைச்சர்கள் பலரையும் காணவில்லை. மத்திய சுகாதாரத்துறை அமைச்சரான ஹர்ஷ் வர்தனே,எப்போதாவதுதான் தலைகாட்டு கிறார்.

அமைச்சர்கள் என்ன செய்கின்றனர்... எங்கே சென்றனர்? என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு யாரும் பதிலளிப்பதாக இல்லை. அதிலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேற்குவங்கத் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பிறகு மொத்தமாகவே காணாமல் போய்விட்டார்.இந்நிலையில்தான், மத்திய உள்துறை அமைச்சரான ‘அமித் அனில் சந்திர ஷா’-வை காண வில்லை என தில்லி காவல் நிலை யத்தில் காங்கிரஸ் மாணவர் பிரிவு (என்எஸ்யுஐ) பொதுச்செயலாளர் நாகேஷ் கரியப்பா புகார் அளித்துள்ளார். 

‘நாடு ஒரு கொடிய தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் நெருக்கடியில் இருக்கும்போது, ​​முழு நாட்டிற்கும் பொறுப்புக்கூற வேண்டியது அரசியல்வாதி களின் கடமையாகும். அரசியல் வாதிகள் தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும். நெருக்கடி சூழ்நிலையி லிருந்து ஓடக்கூடாது. ஆனால், தொற்றுநோய் அபாயத் தில் நாடு சிக்கியுள்ளபோது, இரண்டாவது மிக சக்திவாய்ந்த மற்றும் பொறுப்பான அமைச்சரை (அமித்ஷா) நீண்ட நாட்களாக காணவில்லை. அமித்ஷா இப்போது நாட்டின் உள்துறை அமைச்சரா? இல்லை பாஜக உறுப்பினரா? என்று தெரிய வேண்டும்’ என்று கரியப்பா கூறியுள்ளார்.

;