india

img

நாடாளுமன்றத்தில் தாக்கலான வேலை நிறுத்தத் தடை மசோதா... ‘பெகாசஸ்’ அமளியை வாய்ப்பாக்கிக் கொண்ட மோடி அரசு...

புதுதில்லி:
எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே, பாதுகாப்புத் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் மற்றும் போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கும் மசோதாவை, மோடி அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த புதிய மசோதாவை பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் அறிமுகப் படுத்தியுள்ளார்.பாதுகாப்பு அமைச்சகத்தின், பாதுகாப்பு உற்பத்தித் துறையின் கீழ் செயல்படும் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரியதொழில்துறையாக, இந்தியராணுவ தளவாட தொழிற்சாலை கள் உள்ளன. இந்நிலையில், ராணுவத் தளவாட வழங்கலில் தன்னாட்சி, பொறுப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்து கிறோம் என்ற பெயரில், இந்த தொழிற்சாலைகளை நூறு சதவீதம் அரசுக்கு சொந்தமான கார்ப்பரேட் நிறுவனமாகவோ அல்லது நிறுவனங்கள் சட்டம் 2013-இன் கீழ் அதனை ஒரு நிறுவனமாக்கவோ அரசு முடிவு செய்தது.

இந்த முடிவுக்கு எதிராக, பாதுகாப்புத்துறை ஊழியர் சங்கங்கள் ஏற்கெனவே காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு நோட்டீஸ் கொடுத்திருந்தன. ஜூலை 26 முதல் வேலை நிறுத்தம் துவங்குவதாகவும் இருந்தது.ஆனால், அதற்குள்ளாகவே, பெகாசஸ் ஸ்பைவேர், வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்றம் அமளிக்கு உள்ளாகி யிருக்கும் நேரத்தைப் பயன் படுத்தி, ‘அத்தியாவசிய பாதுகாப்பு சேவை மசோதா- 2021’ என்ற பெயரில், பாதுகாப்புத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதற்கு தடை விதிக்கும் மசோதாவை மோடி அரசு மக்களவையில் அறிமுகப் படுத்தி உள்ளது. இச்சட்டம் அத்தியாவசிய பாதுகாப்பு சேவைத் துறையில் வேலை நிறுத்தத்தை தடைசெய் யும்.  அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு வழங்குகிறது. வேலை நிறுத்தம், போராட்டம் போன்றவற்றில் பாதுகாப்புத்துறை ஊழியர்கள் ஈடுபட்டால் அவர்களை பணி நீக்கம் உள்ளிட்ட ஒழுங்குநடவடிக்கை எடுப்பதற்கும் வழிகோலுகிறது. அதுமட்டுமல்ல, வேலைநிறுத்தப் போராட்டங் களைத் தூண்டுவோர் மற்றும்அதற்கு நிதியுதவி வழங்கு வோருக்கு அபராதம் விதிக்க வும் இம்மசோதா அதிகாரம் அளிக்
கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

;