india

img

தில்லியில் போராடும் விவசாயிகள் உயிரிழப்பா? தகவல் இல்லை என்று தோமர் அலட்சியம்....

புதுதில்லி:
ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியின் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் எல்லைகளை முற்றுகையிட்டு, கடந்த 9 மாதமாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இரவும் பகலும், வெயில், மழை,குளிர் என அனைத்து காலநிலைகளையும் எதிர்கொண்டு நடைபெற்று வரும் இந்தப் போராட்டத் தில் இதுவரை 350-க்கும் அதிகமான விவசாயிகள் இறந்துள்ளனர். எனினும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.இதனிடையே, தில்லி எல்லையில் போராடும் விவசாயிகளில் எத்தனை பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்று மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. 

இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள ஒன்றிய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா், “தில்லி எல்லைகளில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத் தில் உயிரிழந்த விவசாயிகள் குறித்துஅரசிடம் தகவல் இல்லை” என்றுஅலட்சியமாக பதிலளித்துள்ளார். அதேநேரம், போராட்டம் தொடர் பாக இதுவரை 43 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள் ளார்.

;