india

img

நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் தொடரும்.... சம்யுக்தா கிசான் மோர்ச்சா அறிவிப்பு....

புதுதில்லி:
விவசாயிகள் போராட்டம் நாடு முழுவதும் அமைதியாகத் தொடரும் என உறுதியளிக்கிறோம் என்று சம்யுக்தா கிசான் மோர்ச்சா தெரிவி்த்துள்ளது.

விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லி மாநிலஎல்லைகளில் பல்வேறு மாநில விவசாயிகள் 60 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து வேளாண் சட்டங்களை அமல்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தது. இந்நிலையில் பிரதமர் மோடியின் அறிக்கையைத் தொடர்ந்து,  சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்தாவது:வேளாண் சட்டங்கள் குறித்து பேசுவதற்காகத்தான் விவசாயிகள் தாங்கள் தேர்ந்தெடுத்த அரசுடன் பேச தில்லிக்கு வந்துள்ளார்கள். ஆதலால், மத்திய அ ரசுடன் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது, பேச்சுவார்த்தைக்கான கதவுகள் அடைக்கப்பட்டன என்ற கேள்விக்கே இடமில்லை.வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிசெய்ய சட்டபூர்வ அங்கீகாரம் தேவை ஆகிய கோரிக்கைகள் தொடர்ந்து வைக்கப்படும்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திவரும் போராட்டங் களை பலவீனமடையச் செய்யும் நோக்கில்,சிதைக்கும் நோக்கில் காவல்துறையினர் செய்த முயற்சிகளை நாங்கள் கண்டிக்கிறோம். அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதலை நடத்த காவல்துறையினர் தூண்டிவிட்டனர் என்பது தெளிவாகத் தெரிந்தது.காவல்துறையினர் மற்றும் பாஜக குண்டர்களின் தொடர்ந்து செய்த வன்முறை மூலம் மத்திய அரசுக்கு உள்ளூர அச்சம் ஏற்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. எங்கள் போராட்டம் நாடு முழுவதும்அமைதியாகத் தொடரும் என உறுதி யளிக்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
 

;