india

img

வேளாண் சட்டங்களை நீக்காவிட்டால் தோல்வி உறுதி.... தேசிய தலைமையிடம் மல்லுக் கட்டும் பஞ்சாப் மாநில பாஜக தலைவர்கள்....

சண்டிகர்:
மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்துசெய்யாவிட்டால், பஞ்சாப் தேர்தலில் வெற்றிபெறுவதை அடியோடு மறந்து விடுங்கள் என்று, பாஜக தேசியத் தலைமைக்கு, அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூன்று வேளாண் சட்டங்கள் விஷயத்தில், பஞ்சாப் மாநில பாஜக தலைவர்கள் இதுவரையிலும் அமைதியாகவே இருந்து வந்தனர். ஆனால், 2022-இல்பஞ்சாப் மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் கட்டாயத்தில் உள்ள அவர்கள், வேளாண் சட்டங்கள் குறித்துப் பகிரங்கமாக பேச ஆரம் பித்துள்ளனர். விவசாயிகள் விரும்பாத சட்டங்களைரத்து செய்துவிட்டுப் போக வேண்டியதுதானே... என்று தங்களின் தேசியத் தலைமைக்கு அறிவுறுத்தத் துவங்கியுள்ளனர்.“வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் மேம்பாட்டிற்கானதுதான் என்று நம்மால் விவசாயிகளை நம்ப வைக்க முடியாமல் போய்விட்டது. இந்தச் சூழலில், சச்சரவை அதிகரிக்காமல், மூன்று சட்டங்களையும் ரத்து செய்து விஷயத்தை முடிவுக்குக் கொண்டு வருவதுதான் சரியானதாக இருக்கும்” என்று பஞ்சாப் மாநில முன்னாள் பாஜக அமைச்சர் அனில் ஜோஷி ‘தி வயர்’ ஏட்டிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

“எந்தவொரு அரசாங்கமும் இந்த பிரச்சனையை நீண்ட காலத்திற்கு நகர்த்திக் கொண்டு செல்வது விவேகமானதல்ல. பஞ்சாப் ஏற்கெனவே 80 மற்றும்90-களில் பெரிய அளவிலான வன்முறைகளைக் கண்ட மாநிலம். அப்போது எனதுதந்தையையே நான் இழந்தேன். சில சக்திகள் போராட்டத்தை தவறான திசையில்கொண்டு சென்றால் யார் பொறுப்பு? அதன்ஒரு காட்சியை குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் ஏற்கெனவே நாம் பார்த்து விட்டோம். எனவே, இந்த பிரச்சனைஎந்த வகையிலாவது தீர்க்கப்பட வேண்டும்”என்று கூறியிருக்கும் அனில் ஜோஷி, “போராட்டம் தில்லிக்குச் செல்வதற்கு முன்பாகவே, விவசாயிகள் சங்கத் தலைவர்களிடம் பேசி, அவர்களுக்கு நம்பிக்கை அளித்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால்,பிரச்சனை இந்தளவிற்கு தீவிரம் அடைந்திருக்காது. தற்போது பஞ்சாப்பிலிருந்து வெளியேறி, உலகத்தையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கான போராட்டமாக மாறியிருக்காது. இதில் ஏற்பட்ட அலட்சியம், தற்போது ஒன்றிய அரசுக்கான பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அனில் ஜோஷி, அமிர்தசரஸ் (வடக்கு)தொகுதி எம்எல்ஏ-வாக இருந்தவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.மேலும் இதுதொடர்பாக கூறியிருக்கும்அனில் ஜோஷி, “பஞ்சாப்பில் கட்சியின்மாநிலத் தலைவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள். தங்கள் தொகுதிகளில் அல்லதுபகுதிகளில் சிறிய செயல்பாடுகளை மேற்கொள்வதற்குக் கூட, அவர்களை விவசாயிகள் அனுமதிப்பதில்லை. இதனால், அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்குரிய தைரியத்தைக் கூட பாஜக இழந்து நிற்கிறது.

2021 பிப்ரவரியில் நடந்த நகராட்சித் தேர்தலில் பாஜக எவ்வளவு மோசமாக செயல்பட்டது என்பதை ஏற்கெனவே பார்த்து விட்டோம். போட்டியிட்ட 2,500 இடங்களில் 45 இடங்களை மட்டுமே வென்றது. எனவே, ஒரு கட்சி இப்படி இயங்க முடியாது. விவசாயிகளின் பிரச்சனையை விரைவாக தீர்க்க வேண்டிய நேரம் இது!” என்றும்குறிப்பிட்டுள்ளார்.பாஜகவின் மூத்தத் தலைவர்களில் ஒருவரும், மாநிலத்தின் மற்றுமொரு முன்னாள் அமைச்சரான மாஸ்டர் மோகன்லாலும், இதே கருத்தையே வெளிப்படுத்தியுள்ளார்.“பஞ்சாப் விவசாயிகளின் எதிர்ப்பு நிச்சயமாக பாஜகவுக்கு நல்லதல்ல. இவ்வாறுசொல்வதில் எனக்கும் எந்தவித தயக்கமும் இல்லை. ஏனெனில், பஞ்சாபில் பாஜகவின் நிலைமை கவலை அளிக்கிறது. நாங்கள் (பாஜகவினர்) எங்கு சென்றாலும், விவசாயிகள் சாலைகளைத் தடுத்து,எங்கள் வாகனங்களை முற்றுகை இடுகிறார்கள். நாங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறோம். அரசியல் நடவடிக்கைகளை சுதந்திரமாக மேற்கொள்ள முடியவில்லை. இதற்கே முடியாதபோது, தேர்தலில் போட்டியிடுவது பற்றி எங்கே யோசிப் பது? அதனால் வெற்றி பெறுவதையும் மறந்து விட வேண்டியதுதான்” என்று மாஸ்டர் மோகன் லால் கூறியுள்ளார்.

“நமது பிரதமர் நரேந்திர மோடி ஒருகவர்ந்திழுக்கும் தலைவர். சாத்தியமற்றவற்றை சாத்தியங்களாக மாற்றும் வித்தைஅவரிடம் உள்ளது. அவர் தனது விரலால் ஒரு சிக்கலை தீர்க்க முடியும். ஆனால் இந்த விவகாரம் குறித்து அவருக்கு இன்
னும் சரியாக விளக்கப்படவில்லை என்றுநான் நம்புகிறேன்.விவசாயிகளின் நலனுக்காக இந்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால்,இந்தச் சட்டம் தங்களின் நலனுக்கானதாக இல்லை என்று விவசாயிகள் கூறினால், அதன் முடிவை ஆராய்வதற்கு அரசாங்கம் கடமைப்பட்டு இருப்பதாக நான்கருதுகிறேன். அரசாங்கம் என்பது மக்களின் நலனுக்காகத்தான்” என்றும் மோகன்லால் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், பஞ்சாப் மாநில பாஜக தலைவர் அஸ்வனி சர்மாவோ, பாஜக தலைவர்கள் சிலர் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள் அவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் என்றும் அவை கட்சியின் பார்வையை பிரதிபலிப்பதாக இல்லை என்றும் மழுப்பியுள்ளார். “தேர்தல்கள் வரட்டும், அப்போது கட்சி117 இடங்களிலும் முழு வீரியத்துடனும் உற்சாகத்துடனும் போட்டியிடும், மக்களின் ஆதரவையும் பெறும்” என்றும் சர்மா தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டுள்ளார்.

;