india

img

மார்ச் 31  வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு....

புதுதில்லி:
கொரோனா கட்டுப்பாடுகளை மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தொற்றுக்கு தற்போதுதான் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு செலுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவும், பெருந்தொற்றில் இருந்து வெளியே வரவும் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மக்களுக்கு தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றன.அதன்படி கட்டுப்பாட்டு மண்டலங்கள் தொடர்ந்து கவனமாக வரையறுக்கப்பட வேண்டும். இந்த மண்டலங்களுக்குள் பின்பற்றப்படும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், கொரோனா கால கட்டுப்பாட்டு விதிமுறைகள் கண்டிப்பாக செயல்படுத்தப்பட வேண்டும். அனுமதிக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில், வழிகாட்டு நெறிமுறைகள் துல்லியமாக பின்பற்றப்பட வேண்டும். கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள் தொடர்ந்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் பின்பற்றப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;