india

img

தற்சார்பு திட்டத்தில் முழுவாய்ப்பும் தனியார் துறைக்கே... நிதிஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி ‘தாராள’பேச்சு....

புதுதில்லி:
நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் காணொலி வாயிலாக சனிக்கிழமையன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடிபேசுகையில்,  நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசும், மாநிலஅரசுகளும் இணக்கமாக பணியாற்றுவது அவசியம். காலம் கடந்த சட்டங் கள் நீக்கப்பட்டு, எளிதாகத் தொழில் செய்வதற்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும். தற்சார்பு இந்தியா திட்டத்தில், தனியார் துறைக்கு முழுமையான வாய்ப்பு அளித்து ஓர் அங்கமாக இருக்க வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தனியார் துறையின் பங்களிப்பை அரசு மதிக்க வேண்டும்.

இந்திய வளர்ச்சியின் அடித்தளமே மத்திய அரசும், மாநிலங்களும் இணைந்து பணியாற்றுவதுதான். குறிப்பிட்ட இலக்கை நோக்கி, பணியாற்றி கூட்டுறவு கூட்டாட்சியை இன்னும் அர்த்தமுள்ளதாக்க வேண்டும்.இது மட்டுமல்லாமல், கூட்டுறவு கூட்டாட்சியை போட்டித்தன்மையுள்ளதாக மாற்ற முயன்று, மாநிலங்களுக்கு இடையே மட்டுமல்லாது மாவட்டங்களிடையேயும் கூட்டுறவை வலுப் படுத்த வேண்டும்.2021-22ம் ஆண்டுபட்ஜெட் பற்றி சாதகமான பதில்கள் வந்துள்ளன. நாட்டின் வளர்ச்சியை வேகமாகக் கொண்டு செல்ல இந்த பட்ஜெட் உதவும். வேளாண் பொருட்கள் இறக்குமதியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமையல் எண் ணெய் இறக்குமதி குறைக்கப்பட்டு உள்நாட்டு உற்பத்தியாளர்களைக் காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

;