india

img

தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதியோர் வழக்கமான பணியை செய்யலாம்...   நிதி ஆயோக் உறுப்பினர் கூறுகிறார்....

புதுதில்லி:
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட முதியவர்கள் தங்களது இயல்பான வாழ்க்கையை தொடங்கலாம் என்றும் வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் நிதிஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே. பால் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாட்டில்கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை ஒன்றிய அரசு தீவிரமாக்கி வருகிறது.அவ்வாறு தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதியவர்கள் தங்களது இயல்பு வாழ்க்கையைத் தொடங்கலாம்.

ஆனால் அதே நேரத்தில் முகக்கவசம் அணிதல், சமூகஇடைவெளியைக் கடைப்பிடித்தல், கூட்டமாக இருக்கும் இடங்களைத் தவிர்த்தல் போன்றவிதிமுறைகளை பின்பற்றவேண்டும். 2 டோஸையும் செலுத்திக் கொண்ட முதியவர்கள்,வீட்டுக்கு வெளியே நடந்து செல்லலாம். தங்களது வழக்கமானபணிகளை அவர்கள் மேற்கொள்ளலாம். ஒன்றிய, மாநிலஅரசுகளின் ஒருங்கிணைப்பால் ஜூன் 21 ஆம் தேதி சாதனைஅளவாக 86 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த வாரம் முழுவதும் அதிக அளவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடரும் என்று தெரிவித்தார்.

;