india

img

கொரோனா 2-ஆவது அலையால் ஆட்டம் காணும் பொருளாதாரம்... பாதிப்பை எதிர்கொள்ள அனைவரும் தயாராகுங்கள்... நிதி ஆயோக் துணைத்தலைவர் சொல்கிறார்....

புதுதில்லி:
கொரோனா தொற்றின் 2-ஆவது அலை, மிக வேகமாகப் பரவி வரும் நிலையில், இது பொருளாதார ரீதியாக இந்தியாவில் மிகப்பெரிய நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தக் கூடும்என்று ‘நிதி ஆயோக்’ துணைத் தலைவர் ராஜீவ் குமார் எச்சரித்துள்ளார்.கொரோனாவின் முதல் அலையைவிட, இந்த 2-வது அலை மிகவும் கடினமான சூழலை உருவாக்கி இருப்பதால்பொருளாதார ரீதியான பாதிப்புக் களை எதிர்கொள்வதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர்கூறியுள்ளார்.இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ராஜீவ் குமார் பேட்டி அளித்துள்ளார்.

‘தற்போது நாட்டில் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். அதேபோல உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் பெரிய அளவிற்கு அதிகரித்துள்ளது, நாட்டில் இருந்து கொரோனாவை முற்றிலும் ஒழித்துக் கட்டுவதற்கான விளிம்பில் இந்தியா கடந்த ஆண்டு இருந்தது. ஆனால் இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து வந்தபுதிய உருமாறிய தொற்றுகள் நாட்டில்நிலைமையை மோசமாக்கி விட்டன.இந்த 2-ஆவது அலையால் சேவைத் துறை போன்ற சில துறைகளில் நேரடி பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

நாட்டின் பொருளாதார சூழலிலும் இது நிச்சயமற்ற தன்மையை அதிகரிக்கும். பொருளாதார நடவடிக்கைகளில் பரந்த மறைமுக விளைவுகளை ஏற்படுத்தும்.எனவே, பெரிய அளவிலான நிச்சயமற்ற பொருளாதார சூழலுக்கு நுகர்வோரும், உற்பத்தியாளர்களும் தயாராக இருக்க வேண்டும்’ என்று அந்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள் ளார்.பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கம் அளிக்கும் திட்டம்ஏதேனும் மத்திய அரசின் பரிசீலனையில் இருக்கிறதா? என்ற கேள்விக்கு, ‘2-ஆவது அலையின் நேரடி மற்றும் மறைமுக தாக்கங்களை ஆய்வு செய்து நிதியமைச்சகம்தான் அதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும்’என்றும் ராஜீவ் குமார் பதிலளித்துள் ளார்.

;