india

img

மக்களின் உயிரை விட பொருளாதாரம் பெரிதல்ல..... கைகளை ரத்தக் கறை ஆக்கிக் கொள்ளாதீர்கள்...

புதுதில்லி:
கொரோனா தொற்றின் 2-ஆவது அலை, முன்பை விட வேகமாக பரவிவரும் நிலையில், நாட்டிலுள்ள மருத்துவமனைகள் பலவும் நிரம்பிவழியத் துவங்கியுள்ளன. நோயாளிகளுக்குத் தேவையான படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், நீதிபதிகள் விபின் சங்கிமற்றும் ரேகா பள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர்.மத்திய அரசுத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேட்டன் சர்மாஆஜராகி வாதாடிய இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் கூறியிருப்பதாவது:

மனித உயிர்கள் தற்போது ஆபத்தில் உள்ளது. 130 கோடி மக்கட் தொகையைக் கொண்ட இந்த நாட்டில் இரண்டு கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தகவல் கூறுகிறது. உண்மையான பாதிப்பு இதைவிட 5 மடங்கு இருந்தாலும், 10 கோடி பேருக்குத்தான் கொரோனா இருக் கும். எனவே மிச்சமிருக்கும் மற்றவர்களைக் காப்பாற்ற விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதே வேகத்தில் போனால், ஒரு கோடி பேரைக் கூட நாம் இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம். நீதிபதிகளாகிய நாங்கள் ஒரு அரசை நடத்த இங்கு வரவில்லை. ஆனால் தற்போதுள்ள நிலைமையின் தீவிர தன்மையை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என்று கருதுகிறோம். கங்கா ராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் நோயாளிகளுக்கு வழங்கும் ஆக்சிஜன் அளவை குறைத்திருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், ஏப்ரல்22-ஆம் தேதிக்குப் பிறகே, தொழிற்சாலைகள் ஆக்சிஜனை பயன்படுத் தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏப்ரல் 22-ஆம் தேதி வரை எதற்காகக் காத்திருக்க வேண்டும். அதுவரை மக்களின் உயிர் ஆபத்தில்இருக்க வேண்டுமா, என்ன? 

மக்களின் வாழ்க்கையைவிடப் பொருளாதார நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்க முடியாது. தொழிற்சாலைகள் காத்திருக்கலாம். ஆனால் கொரோனா நோயாளிகள் காத்திருக்க முடியாது. போதுமான அளவில் மருந்துகள் இருந்தும், சரியான நேரத்தில் தேவையான இடங்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்று சேரவில்லை என்றால், ஆட்சியாளர்களின்கைகளில் ரத்தக் கறை படியும் என் பதை மறந்து விடாதீர்கள். இவ்வாறு நீதிபதிகள் குறிப்பிட் டுள்ளனர்.

;