india

img

பொருளாதாரம் - சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்த ஒன்றிய பாஜக அரசு... லாலு பிரசாத் குற்றச்சாட்டு....

புதுதில்லி:
மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக ஆட்சியில்  நாட்டின் பொருளாதாரமும்  சமூக நல்லிணக்கமும் சீர்குலைந்துவிட்டன என்று ராஷ்ட்டிரீய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.

ராஷ்ட்டிரீய ஜனதா தளத்தின் 25-வது ஆண்டுதொடக்க விழாவை முன்னிட்டு தொண்டர்களிடம் காணொலிக் காட்சி மூலம்  லாலு பிரசாத் பேசியதாவது:பாஜக ஆட்சியில் நாடு மிகவும் பின்தங்கிவிட்டது. நாட்டின் பொருளாதாரமும் மக்களிடையே நல்லிணக்கமும் சீர்குலைந்து விட்டன. சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன. அயோத்திக்கு பிறகு மதுராவிலும் கோயிலை மீட்க வேண்டும் என்று குரல்கள் எழுப்பப்படுகின்றன. இதற்கு என்ன அர்த்தம்? இந்த நாட்டில் என்ன செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசு விரும்புகிறது?கொரோனாவை விட அதிகமாக வேலையில்லாத் திண்டாட்டமும் விலைவாசி உயர்வும் மக்களின் முதுகெலும்பை முறிக்கின்றன. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே செல்கிறது. மக்களின் வறுமை அதிகரிப்பது நாட்டுக்கு நல்லதல்ல. பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசில் ஊழல் அதிகரித்துவிட்டது.  இவ்வாறு அவர் பேசினார்.

;