india

img

40 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வீழ்ச்சி... மைனஸ் 7.3 சதவிகிதமாக சரிந்த ஜிடிபி... நிதிப் பற்றாக்குறையும் 2.6 மடங்கு அதிகரிப்பு....

புதுதில்லி:
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அளவிட உதவும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (GDP) குறித்த புள்ளிவிவரங்களை மத்திய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) திங்களன்று வெளியிட்டது.

இதில், இந்தியாவின் ஜிடிபி, கடந்த40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகமோசமான பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்திருப்பது தெரியவந்துள்ளது.2019-20ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4 சதவிகிதம் வளர்ச்சி அடைந்திருந்த நிலையில் 2020-21 நிதியாண்டில் மைனஸ் 7.3 சதவிகிதம் என்று படுமோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.2020-21 நிதியாண்டின்- ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி மைனஸ் 24.38 சதவிகிதம் என்ற அளவிற்கு வீழ்ச்சிக் கண்டது. ஜூலை- செப்டம்பர் இடையிலான இரண்டாவது காலாண்டில் சற்று குறைந்தாலும் தொடர்ந்து மைனஸ் 7.5 சதவிகிதம் என்ற வீழ்ச்சியிலேயே தொடர்ந்தது. மூன்றாவது காலாண் டில் 0.5 சதவிகிதம் என்று சிறு வளர்ச்சிஏற்பட்டது. நான்காவது காலாண்டிலும் இது 1.6 சதவிகிதம் என்று வளர்ந்துள்ளது.எனினும் ஒட்டுமொத்தமாக 2020-21 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி மைனஸ் 7.3 சதவிகிதமாகவே தொடர்கிறது.

ஜிடிபியானது தொடர்ந்து இரண்டு காலாண்டுகள் வீழ்ச்சியில் சென்றால், நாடு பொருளாதார மந்தநிலையில் உள்ளதாக கணக்கிடப் படும். அந்த வகையில் இந்த நிதியாண்டின் முதல் இரண்டு காலாண்டுகளிலும் ஜிடிபி மைனஸில் சென்றநிலையில், அப்போதே இந்தியா பொருளாதார மந்த நிலைக்குள் நுழைந்து விட்டது. தற்போது முழு நிதியாண்டிற்கான ஜிடிபி-யும் மைனஸ் 7.3 சதவிகிதம் என வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இதன்மூலம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வீழ்ச்சியை இந்தியா சந்தித்துள்ளது.

2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 1.6 சதவிகிதம் என்ற வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அமெரிக்கா 6.4 சதவிகிதம் என்ற வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதேநேரத்தில் மக் கள் சீனக் குடியரசு, 2020-2021 நிதியாண்டின் ஜனவரி - மார்ச் காலாண்டில் 18.3 சதவிகிதம் அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிதிப்பற்றாக்குறை 18 லட்சம் கோடி ரூபாய்
நாட்டின் ஜிடிபி மைனஸ் 7.3 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்துள்ள அதேகாலத்தில் 2020-21ஆம் நிதியாண்டில் (2020 ஏப்ரல் முதல் 2021 மார்ச் வரை) நாட்டின் ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை அளவு இந்தியாவின் ஜிடிபி-யில் 9.3 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. தொகை அடிப்படையில், நாட்டின் நிதிப் பற்றாக்குறை 18 லட்சத்து 21 ஆயிரத்து 461 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020 பிப்ரவரியில் முன்வைத்த பட்ஜெட் அறிவிப்பில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 3.5 சதவிதமாக இருக்கும் என்று கூறியிருந்த நிலையில், தற்போது அதைக்காட்டிலும் 2.6 மடங்கு நிதிப்பற்றாக் குறை உயர்ந்துள்ளது.

                                                ********************

கொரோனா அல்ல; மோடி அரசின் தவறுகளே வீழ்ச்சிக்கு காரணம்..

 2011 முதல் 2014 வரையில் மன் மோகன் சிங் ஆட்சியின்போது, சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 110 டாலரில் இருந்தது. அதுவேமோடி ஆட்சிக்கு வந்தபோது 2015-இல் 85 டாலராகவும் 2017, 2018ல்-இல் 50 டாலருமாக சரிபாதியாக குறைந்தது. இது பணவீக்கப் பிரச்சனையிலிருந்து மோடி அரசைக் காப்பாற்றியது. எனினும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பிரதமர்மோடி மக்களைக் காப்பாற்றவில்லை. மாறாக,பெட்ரோல் - டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான வரியை பன்மடங்கு உயர்த்தினார்.

மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கியமுற்போக்குக் கூட்டணி, ஆட்சியை விட்டுப் போகும் போது 2014-ஆம் ஆண்டில் பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரி 4.9 சதவிகிதமாகவே இருந்தது. 2004-இல் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு, ஆட்சியை விட்டுப் போகும்போதுபெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரி 12.6 சதவிகிதமாக இருந்தது. அது படிப்படியாகக் குறைக்கப்பட்டுத்தான் 4.9 சதவிகிதத்திற்கு கொண்டுவரப்பட்டது.

ஆனால், 2014-இல் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபின் 2021 வரையிலான இந்த 7 ஆண்டுகளில் கலால்வரியை 5 மடங்கு உயர்த்தியுள்ளது. தற்போதுபெட்ரோலியப் பொருட்களுக்கு 25 சதவிகிதம்கலால் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகப் பதவியேற்றிய போது அமெரிக்க டாலருக்கு எதிரானஇந்திய ரூபாயின் மதிப்பு 59 ரூபாய். ஆனால்,மோடியின் 7 ஆண்டு ஆட்சியில் இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு அமெரிக்க டாலருக்கு 73 ரூபாயாக கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.வேலையின்மை, வருவாய் இழப்பு பெரும்பிரச்சனையாக மாறியுள்ளது. மோடியின் 7 ஆண்டுகளில் சுமார் 23 கோடி பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் தள்ளப்பட்டு உள்ளதாக CMIE-CPHS ஆய்வுகள் தெரிவித்துள்ளன.இவற்றுக்கான ஒட்டுமொத்த பழியையும், மோடி அரசு கொரோனா பெருந்தொற்றின் மீது தூக்கிப் போட்டாலும், உண்மையில் 2016 நவம்பர் 8-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த பணமதிப்பு நீக்கம், 2017 ஜூலையில் கொண்டுவரப்பட்ட திட்டமிடல் இல்லாத ஜிஎஸ்டி (GST)அமலாக்கம், கண்மூடித்தனமான கார்ப்பரேட் ஆதரவு, பொருளாதாரப் பிரச்சனைகளில் அக்கறை செலுத்தாமல், பசுப் பாதுகாப்பு, ராமர் கோயில், காஷ்மீருக்கான பிரிவு 370 நீக்கம், இஸ்லாமியர்க்கு எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டம் என மதஅடிப்படைவாதத்தில் மூழ்கியது போன்றவையே இன்றைய வீழ்ச்சிக்கான உண்மையான காரணங்கள் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

;