india

img

நியூஸ் கிளிக் இணைய இதழை முடக்காதே....

சுதந்திரமாகச் செயல்பட்டுவரும் செய்தி இணையதளமான நியூஸ்கிளிக்.காம் மீதும் அதன் முதன்மை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மேம்படுத்துவோர் மற்றும் நிர்வாக அதிகாரிகளின் வீடுகளில் சோதனை செய்திருப்பது தொடர்பாக, இந்திய
எடிட்டர்ஸ் கில்டு தன் ஆழ்ந்த கவலையை வெளிப் படுத்திக் கொள்கிறது.கடந்த சில காலமாக இந்த இணையதளம், விவசாயிகள் போராட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டத் திற்கு எதிரான போராட்டங்களையும், அரசாங்கத்தின் கொள்கைகள் பலவற்றைக்குறித்தும் மற்றும் அதிகாரத்துடன் விளங்கும் ஒருசில கார்ப்பரேட் நிறுவனங்கள் குறித்தும் விமர்சன ரீதியாகவும் செய்திகளைவெளியிட்டுவந்ததில் முன்னணிப் பாத்திரம் வகித்தது.சுதந்திரமான முறையில் செயல்பட்டுவரும் இதழியலை நசுக்குவதற்காக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக அரசாங்கத்தின் முகமைகள் பயன்படுத்தப்பட்டு அந்நிறுவனங்கள் மீது சோதனை மேற்கொள்வதற்கு இந்திய எடிட்டர்ஸ் கில்டு தனதுஎதிர்ப்பை பதிவு செய்கிறது. நியூஸ்கிளிக் இணையதளம் செய்திகள் வெளியிடுவதனையும், அதன் செய்தியாளர்களையும், அதனுடன் சம்பந்தப்பட்டுள்ள இதரர்களையும் நடவடிக்கைகள் என்ற போர்வையின்கீழ் துன்புறுத்தி அடக்கக் கூடாது.

இந்திய எடிட்டர்ஸ் கில்டு அறிக்கையிலிருந்து...

;