india

img

ரயில்வே மூலம் 15,000 மெட்ரிக் டன்  ஆக்சிஜன் விநியோகம்....

புதுதில்லி:
ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் விநியோகித்த திரவ மருத்துவ ஆக்சிஜன் அளவு 15,000 மெட்ரிக் டன்களை கடந்தது.

இந்திய ரயில்வே, பல மாநிலங்களுக்கு936 டேங்கர்களில், 15,284 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை விநியோகித்துள்ளது. இதுவரை 234 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தங்கள் பயணத்தை முடித்து, பல மாநிலங்களுக்கு நிவாரணத்தை அளித்துள்ளது.தற்போது 9 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள், 31 டேங்கர்களில் 569 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை கொண்டு செல்கின்றன. அசாம் மாநிலத்துக்கு முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில், 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் திங்களன்று காலை சென்றது. கர்நாடகாவுக்கு, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் விநியோகிக்கப்பட்ட ஆக்சிஜன் அளவு 1000 மெட்ரிக் டன்களை கடந்துவிட்டது.  ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒவ்வொரு நாளும்,800 மெட்ரிக் டன்னுக்கு மேற்பட்ட ஆக்சிஜனை விநியோகிக்கின்றன.தற்போது வரை மகாராஷ்டிராவுக்கு 614, உத்தரப்பிரதேசத்துக்கு 3609, மத்தியப் பிரதேசத்துக்கு 566, தலைநகர் தில்லிக்கு 4300, ஹரியானாவுக்கு 1759, ராஜஸ்தானுக்கு 98, கர்நாடகாவுக்கு 1063, உத்தரகண்டுக்கு 320, தமிழகத்துக்கு 857, ஆந்திராவுக்கு 642, பஞ்சாப்புக்கு 153, கேரளாவுக்கு 246, தெலங்கானாவுக்கு 976, அசாமுக்கு 80 மெட்ரிக் டன்கள் ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளன.

;