india

img

கொரோனா விவகாரத்தில் மோடி அரசு மீது அதிருப்தி... கவலையும் கோபமுமாக இருக்கும் 61 சதவிகித இந்தியர்கள்....

புதுதில்லி:
கொரோனா தொற்று அபாயம் மற்றும் ஊரடங்கு காரணமாக, இந்தியர்கள் தீவிர மனச்சோர்வுக்கு ஆளாகிஇருப்பதாவும், சுமார் 61 சதவிகிதம் பேர் கவலை மற்றும் கோபத்துடன் இருப்பதாகவும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

‘ஜன்சத்தா’ (Jansatta) என்ற ஹிந்தி நாளிதழ் இதுதொடர்பாக உள்ளூர் மட்டத்தில் ஆய்வு ஒன்றை நடத்திஅதன் முடிவுகளை வெளியிட்டுள் ளது. அதில், கொரோனா தொற்றின்இரண்டாவது அலை இந்தியா முழுவதும் பீதியை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் 4 லட்சத்திற் கும் அதிகமான கொரோனா தொற்று பாதிப்புக்கள் பதிவு ஆவதும், மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும்ஆக்சிஜன் (Oxygen), படுக்கைகள் இல்லாததும் மக்கள் மீது கடுமையானஉளவியல் தாக்கத்தை (Psychological Impact) ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கொரோனா அலைகளில் சிக்கி மிகவும் பாதிக்கப்பட்டு உள்ள மக்களின் மனநிலையை அறியும் வகையில், 8 ஆயிரத்து 141 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், சுமார் 23 சதவிகிதம் பேர் “மிகவும் கவலை”யாக இருப்பதாகக் கூறினர். எட்டு சதவிகிதம் பேர்தாங்கள் “மனச்சோர்வு அடைந்துள் ளோம்” என்று தெரிவித்தனர். சுமார்20 சதவிகிதம் பேர் தாங்கள் “வருத்தமாகவும் கோபமாகவும்” இருப்பதாகவும், 10 சதவிகிதம் பேர் “கடும் கோபமாக” இருப்பதாகவும் கூறினர். 7 சதவிகிதம் பேர் மட்டுமே “அமைதியாக” இருப்பதாகவும், சுமார் 28 சதவிகிதம் பேர் “நம்பிக்கை தான் எல்லாம்” என்று தங்களைத் தாங்கள்ஆறுதல்படுத்திக் கொண்டனர் என்று ஜன்சத்தா குறிப்பிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 61 சதவிகித இந்தியர்கள்கோபம், பதற்றம் மற்றும் மனச் சோர்வுக்கு உள்ளாகியுள்ளனர்.

கொரோனா நெருக்கடியைச் சமாளிப்பதில் மத்திய அரசாங்கத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்றும் 8 ஆயிரத்து 367 பேரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. கொரோனா நெருக்கடியை நிலைமையைக் கையாள்வதில், இந்திய அரசு சரியான பாதையில் செல்கிறது என்று நினைக்கிறார்களா? எனக் கேட்டதற்கு சுமார் 41 சதவிகிதம் பேர் “ஆம்” என்றும், 45 சதவிகித குடிமக்கள் “இல்லை” என்றும் கூறியுள்ளனர். 14 சதவிகிதம் பேர் எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளனர்.

;