india

img

மோடி ஆட்சியில்தான் ஜனநாயகம் செழித்து ஓங்குகிறது... அமெரிக்கர்களிடம் கெஞ்சிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்....

புதுதில்லி:
உலக நாடுகள் மத்தியில், நரேந்திரமோடி தலைமையிலான இந்திய அரசுபற்றி வேண்டுமென்றே தவறான சித்திரம் ஏற்படுத்தப்படுகிறது; அதை நம்பவேண்டாம் என்று வெளியுறவுத்துறைஅமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கர் கள் மத்தியில் பேசியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பிடன் பதவி ஏற்றதற்குப் பின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் முதன்முறையாக அமெரிக்காவுக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். இந்தப் பயணத்தின் போது, கொரோனா தடுப்பூசி முதல் எல்லைப் பாதுகாப்பு வரை பல விஷயங்கள் குறித்து, அமெரிக்கா அரசுடன்அவர் கலந்துரையாட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான், ஹூவர் நிறுவனம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில்,அமெரிக்காவில் முன்னாள் தேசியபாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டருடன், ஜெய்சங்கர் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அப்போது, இந்தியாவில் நரேந்திர மோடி அரசு கடைப்பிடிக்கும் தீவிர இந்துத்துவா கொள்கை குறித்து, மெக்மாஸ்டர் அதிரடியாக கேள்வி எழுப்பவே பதறிப்போன ஜெய்சங்கர், மோடி அரசை காப்பாற்றுவதற்கு பலவாறாக சப்பைக் கட்டுக்களில் ஈடுபட்டுள்ளார். அந்தநிகழ்ச்சியில் அவர் கூறியிருப்பதாவது:நரேந்திர மோடி அரசை சர்வதேசஅளவில் வேறு வகையில் சித்தரிக்கும்முயற்சிகள் நடக்கின்றன. மத்திய அரசின் தோற்றம் வெளியில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசின் உண்மையான ஆட்சி முறை வேறு மாதிரியானது. உண்மையான நிர்வாகம் வேறு மாதிரியானது. 

இந்தியாவும், இந்திய மக்களும் எப்போதும் ஜனநாயகத்தை மதிக்க கூடியவர்கள். ஜனநாயகத்தை தவிர்த்து வேறு அரசியலை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதற்கு முன்புதான் மக்களின் மத- இன அடையாளங்களை முன்னிறுத்தி, வாக்கு அரசியல் நடந்து கொண்டு இருந்தது. ஆனால், நாங்கள்அதில் இருந்து விலகி வந்து இருக் கிறோம். இந்தியா பல மதங்களின், பலநம்பிக்கைகளின் தொகுப்பு. உலகம் முழுக்க உள்ள பல நம்பிக்கைகளுடன் இந்தியா நெருங்கிய தொடர்புகொண்டது. இந்தியா மதச்சார்பின்மைகொண்ட நாடு. மதச்சார்பின்மை என்றால் ஒரு மதத்தை இகழ்வது இல்லை, எல்லா மதத்தையும் சமமாகமதிப்பது ஆகும். 

இந்தியாவின் ஜனநாயகம் தற்போது செழித்துக் கொண்டு இருக்கிறது. அரசியலில் எல்லா தரப்பிற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாழ்வில் மக்களுக்கு சம வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் தற்போது இந்தியாவில் தங்கள்பின்னணி மீது, கலாச்சாரம் மீது,மொழி மீதும் அதிக பற்று மற்றும் நம்பிக்கை கொண்டு இருக்கிறார்கள்.பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட மக்களும் தங்களை பாதுகாப்பாக உணர்கின்றனர். அனைத் துப் பின்னணி கொண்ட மக்களும் இந்தியாவில் பாதுகாப்பாக உணர,முன்னேற்றம் அடைய தற்போது உள்ள அரசு தீவிரமாக உழைத்து வருகிறது. ஆனால், இந்த விஷயத்தை உலக நாடுகள் சில தவறாக புரிந்து கொள்கின்றன. இவ்வாறு ஜெய்சங்கர் பேசியுள்ளார்.

;