india

img

புகார் கொடுத்தவர்களுக்கு எதிராகவே வழக்கை திருப்பும் தில்லி போலீஸ்? டுவிட்டரை அடுத்து காங். தலைவர்கள் 2 பேருக்கு நோட்டீஸ்....

புதுதில்லி:
‘டூல்கிட்’ விவகாரத்தில், புகார் கொடுத்தவர்களுக்கு எதிராகவே தில்லி காவல் துறை காய் நகர்த்தல்களை மேற்கொள்வதாக காங்கிரசார் குற்றம் சாட்டியுள்ளனர்.கும்பமேளா, கொரோனா2-ஆவது அலை, நாடாளுமன்ற புதிய கட்டுமானம் ஆகியவற்றை முன்வைத்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும்இந்திய அரசுக்கு எதிராககாங்கிரஸ் சதி செய்வதாக பாஜக தலைவர்கள் அண் மையில் குற்றம் சாட்டினர். தங்களின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் என- காங்கிரஸ் வெளியிட்டது என்று கூறி- ‘டூல்கிட்’ (வழிகாட்டுதல்) ஒன்றையும் வெளியிட்டனர்.

ஆனால், இந்த ‘டூல்கிட்’தங்களால் உருவாக்கப்பட் டது அல்ல! என்றும், இதனைவைத்து தங்களுக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றும் தில்லி காவல்துறையில் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தனர்.ஆனால், தில்லி காவல்துறையினரோ, கடந்த 10 நாட்களில் பாஜக தலைவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மாறாக, பாஜக தலைவர்களின் ‘டூல்கிட்’ பதிவுகள் ‘சித்தரிக்கப்பட்டவையாக இருக்கலாம்’ என்று முத்திரை குத் திய டுவிட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பினர். அலுவலகத்திற்குள் புகுந்தும் சோதனையிட்டனர். 

இதற்கு அடுத்ததாக, தற்போது காங்கிரஸ் சமூகவலைதள பிரிவு தலைவர் ரோகன் குப்தா, செய்தித் தொடர்பாளர் ராஜீவ் கவுடா ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இது சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது.டூல்கிட் விவகாரத்தில், மத் திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தில்லி போலீசார் தங்களுக்கு எதிராகவே காய் நகர்த்துவதாக காங்கிரசார் ஆவேசம் அடைந்துள்ளனர். நியாயமான விசாரணை நடைபெறும் என்ற நம்பிக்கை ஏற்படாத பட்சத்தில் கொடுத்த புகாரை திரும்பப் பெறுவது பற்றியும் அவர்கள் ஆலோசனையில் இறங்கியுள்ளனர்.‘டூல்கிட்’டை முதன்முதலில் சமூகவலைதளத்தில் பதிவிட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ராவுக்கு தில்லி காவல்துறை இதுவரை நோட்டீஸ் அனுப்பவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

;