india

img

ராஜஸ்தானிலும் சுங்க வசூல் நிறுத்தி வைப்பு....

புதுதில்லி:
விவசாயிகள் போராட்டத்தின்  ஒரு பகுதியாக ஹரியானா மற்றும் பஞ்சாப் தவிர, ராஜஸ்தானிலும் சுங்ககட்டண வசூலை அரசாங்கம் நிறுத்தியுள்ளது. சுங்க வசூல் மையங்கள் அனைத்து வாகனங்களுக்கும் திறந்துவிடப்பட்டன.

ஜெய்ப்பூர்- தில்லி தேசிய நெடுஞ்சாலையில் ஹரியானா எல்லையில் ஷாஜகான்பூர் டோல் பிளாசாவைவிவசாயிகள் வெள்ளியன்று திறந்து வைத்தனர். சிகார், சுரு, பிகானீர் மாவட்டங்களிலும் விவசாயிகள் சுங்க கட்டண வசூல் மையங்களைத் திறந்தனர். முன்னதாக,ஹரியானா, பஞ்சாப் மற்றும் தில்லி எல்லைப் பகுதிகளில்விவசாயிகள் சுங்க கட்டண வசூல் மையங்களை திறந்தனர். சுங்க கட்டண வசூல் மையங்களில் பெரும்பாலானவை இரண்டு மாதங்களாக போராட்ட மையங்களாக மாறியுள்ளன.

சம்யுக்தா கிசான் மோர்ச்சா வட இந்தியாவில் நடந்துவரும் கிசான் மகா பஞ்சாயத்துகளை நாட்டின் பிற மாநிலங்களில் ஏற்பாடு செய்ய அழைப்பு விடுத்துள்ளது. கிசான் மகா பஞ்சாயத்துகள் எதிர்வரும் நாட்களில்சிகார், ஹனுமன்கர், ராஜஸ்தானில் ஸ்ரீகங்காநகர், ஹரியானாவில் கர்னல், ரோஹ்தக், சிர்சா, ஹிசார், பகதூர்கர், உ.பி.யில் மொராதாபாத் மற்றும் மகாராஷ்டிராவின் அகோலா ஆகிய இடங்களில் ஏற்பாடு  செய்யப்படும்.பி.கே.யூ தலைவர் ராகேஷ் திக்காயத் இதில் கலந்து கொள்கிறார். 

பிப்.18 ரயில் மறியல்
கிசான் மோர்ச்சா 18 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நாடு தழுவிய ரயில் வேலைநிறுத்தத்தையும் அறிவித்துள்ளது. தமிழகத்திலும் ரயில்மறியல் நடைபெறும் என ஒருங்கிணைப்புக்குழு தெரி வித்துள்ளது.

;