india

img

கோவிட் தடுப்பூசியை திறம்பட பயன்படுத்தும் கேரளம் : கழிவு விகிதம் பூஜ்ஜியம்....

புதுதில்லி:
கோவிட் தடுப்பூசியை மிகவும் திறப்பட பயன்படுத்தும் மாநிலம் கேரளம் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தடுப்பூசி வீணாகும் வீதம் பூஜ்ஜியமாக உள்ளது என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியது. அதே நேரத்தில் சில மாநிலங்களுக்கு வழங்கப்படும் கோவிட் தடுப்பூசிகள் முறையாக பயன்படுத்தப்படவில்லை என்றும் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் விமர்சித்தார்

மாநிலங்களுக்கு கிடைத்த கோவிட் 19 தடுப்பூசியின் அளவு 13.10 கோடி என்றும், கழிவு உட்பட மொத்தநுகர்வு 11.43 கோடி என்றும் ராஜேஷ் பூஷண் தெரிவித்தார். 1.67 கோடிக்கும் அதிகமான மருந்துகள் தற்போதுமாநிலங்களிடம் உள்ளன. இதன் மூலம் 2.01 கோடி பேருக்கு வழங்க முடியும். நமது நாட்டில் பிரச்சனை கோவிட் தடுப்பூசி இல்லாதது அல்ல, ஆனால் அதை துஷ்பிரயோகம் செய்யும் மாநிலங்களின் பிரச்சனை என்று அமைச்சகம் கூறியது.இருப்பினும், சிறிய மாநிலங்களில், 8-9 நாட்களில்தடுப்பூசி கிடைக்கும். ‘இதுவரை நாங்கள் 13,10,90,000டோஸ் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கியுள்ளோம். ஒருபுறம், கேரளா போன்ற ஒரு மாநிலம், தடுப்பூசியை வீணாக்காமல் பயன்படுத்துகிறது. மறுபுறம், பல மாநிலங்கள் தங்கள் தடுப்பூசியில் 8-9 சதவீதத்தை வீணாக்குகின்றன என்றார் ராஜேஷ் பூஷண்.மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், தில்லி, ஹரியானா,குஜராத் ஆகிய மாநிலங்களில் நிலைமை மோசமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

;