india

img

கொரோனா தடுப்பூசி தயாரிப்பு.... தனியார், பொதுத்துறை நிறுவனங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி...

புதுதில்லி:
கோவிட் சுரக்சா திட்டத்தின் கீழ் கோவாக்சின் தடுப்பு மருந்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் திறனை மேம்படுத்துவதற்காக, இந்திய அரசின் உயிரித் தொழில்நுட்பத் துறை நிதி உதவி அளித்தது. இதன் மூலம் 2021 செப்டம்பரில் மாதத்திற்கு 10 கோடிக்கும் அதிகமானடோஸ்கள் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படு கிறது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் லிமிடெட் நிறுவனத்தின் வசதிகள் மற்றும் இதர பொதுத்துறை உற்பத்தியாளர்களின் வசதிகள் ஆகியவை தேவையான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை கொண்டு மேம்படுத்தப்பட்டு வருகின்றன.பெங்களூரில் உள்ள  பாரத் பயோடெக் நிறுவனத்தின் புதிய மையத்திற்கு சுமார் ரூ.65 கோடியை இந்திய அரசு வழங்கியுள்ளது.இதன் மூலம், தடுப்பு மருந்து உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.மேலும்  மூன்று பொதுத்துறை நிறுவனங்களுக்கும் தடுப்பு மருந்து உற்பத்தித் திறன் மேம்பாட்டுக்காக ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. ஹப்கைன் பயோ பார்மாசூட்டிகல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.65 கோடி, இந்தியன் இம்யுனலாஜிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.60 கோடி,  பாரத் இம்யுனலாஜிக்கல்ஸ்- பயலஜிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.30 கோடி அளிக்கப்படுகிறது.

;