india

img

கொரோனா தடுப்பூசி செலுத்தியது 23.11 கோடி: மாநிலங்கள் கையிருப்பில் 1.49 கோடி...

புதுதில்லி:
மாநிலங்களின் கையிருப்பில் 1.49 கோடி கொரோனா தடுப்பூசிகள் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.நாடுமுழுவதும் மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசி உத்தி, மே 1 முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் மத்திய மருந்துகள் ஆய்வகம் அனுமதி அளித்த, மொத்த தடுப்பூசிகளில் 50 சதவீதத்தை ஒன்றிய அரசு கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்குகிறது.இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு இதுவரை, 24 கோடிக்கும் அதிகமான (24,60,80,900) தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கியுள்ளது. இதுவரை மொத்தம் 23,11,69,251 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 1.49 கோடி (1,49,11,649) தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன.  இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

;