india

img

ஜன.16-ல் கொரோனா தடுப்பூசி....  

புதுதில்லி:
இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதி வழங்கியது.  

இதைத்தொடர்ந்து ஜனவரி 13 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.இதற்கிடையில், கொரோனா தடுப்பூசியை நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் விநியோகப்பணிகளில் 2 நாட்கள் கால தாமதம் ஏற்பட்டது.  இதனால் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கும் என்று மத்திய அரசு சனிக்கிழமையன்று தெரிவித்துள்ளது.முதல்கட்டமாக 3 கோடி பேருக்கு ,சுகாதார ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

;