india

img

செப்டம்பரில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி?

புதுதில்லி:
கொரோனாவை முற்றிலும் கட்டுப்படுத்த குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்றும்  இதற்கு செப்டம்பரில் அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும்  எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். 

கொரோனா மூன்றாவது அலை உண்டானால் குழந்தை களை பாதிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா செய்தியாளர்களிடம் கூறுகையில்,  அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டு வரும் பைசர் தடுப்பூசியை இந்தியா கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதியும் செப்டம்பரில் கிடைக்க வாய்ப்புள்ளது.  பள்ளிகளை திறப்பதில் நாம் தீவிரமாக செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் உட்பட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே கொரோனாவை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும் . இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42 ஆக உள்ளது.இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுமா என்பதை தற்போது கூற முடியாது. அரசும், பொதுமக்களும் நினைத்தால் 3-வது அலையை தடுக்கலாம் என்று தெரிவித்தார்.

;