india

img

கொரோனா தடுப்பு பணி... தமிழகத்துக்கு ரூ.533.2 கோடி ஒதுக்கீடு....

புதுதில்லி:
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் 25 மாநிலங்களுக்கு 15வது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 

தமிழகம் உள்ளிட்ட 25 மாநிலங்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.8,923.8 கோடி முதல் தவணையாக  ஒதுக்கப் பட்டுள்ளது. தமிழகத்திற்கு ரூ.533.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது15-வது நிதிக்குழுவின் பரிந்துரையின் படி மாநிலங்களுக்கு முதற்கட்டமாக நிதி ஒதுக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் ஜூன் மாதம் ஒதுக்க வேண்டியநிதியை கொரோனா காரணமாக முன்கூட்டியே விடுவித்ததாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. கொரோனா தடுப்புப் பணிகளுக்கு தங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என மத்திய அரசை பல்வேறு மாநிலங்களும் வலியுறுத்தி வந்தன.இதையடுத்து, கொரோனாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. அதிகபட்சமாக உத்தரபிரதேசம் மாநிலத்திற்கு ரூ.1441.6 கோடியும், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ரூ.861.4 கோடியும், பீகார் மாநிலத்திற்கு ரூ.741.8 கோடியும்,மேற்குவங்கத்திற்கு ரூ.652.2 கோடியும், தமிழகத்திற்கு ரூ.533.2 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய நிதியமைச்சகம் உத்தர விட்டுள்ளது.

;