india

img

கொரோனா நோயாளிகள் கறுப்பு சாக்லேட் சாப்பிடவாம்.... மன அழுத்தம் குறையும் என்கிறார் மத்திய அமைச்சர்....

புதுதில்லி:
இலவச தடுப்பூசிக்கு வழி சொல் லுங்கள்... மருத்துவமனையில் படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண் டர்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிசொல்லுங்கள் என்று எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் மத்திய பாஜகஅரசை தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.

ஆனால், அதற்கெல்லாம் வழிசொல்லாத மத்திய சுகாதாரத் துறைஅமைச்சர், மருந்து கிடைக்கவில்லை.. தடுப்பூசி கிடைக்கவில்லை, உறவினர்களை இழந்து விட்டோம் என்று மன அழுத்தத்தில் இருப்பவர்களை கிண்டல் செய்வது போல, கறுப்பு சாக்லேட் சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன், ‘கொரோனாதொடர்பான மன அழுத்தத்திலிருந்து விடுபட 70 சதவிகித கோகோ உள்ளடக்கத்துடன் சிறிய அளவிலான கருப்புசாக்லேட்களை சாப்பிடலாம்’ என்று கூறியுள்ளார்.

மேலும், வேலைவாய்ப்பை இழந்து, ஒருவேளை கஞ்சிச் சோற்றுக்கே பாடாய் படும் மக்களிடம், ராகி, ஓட்ஸ்,அக்ரூட் பருப்புகள், பாதாம், ஆலிவ்எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய்,கோழி, மீன், முட்டை, பன்னீர், சோயா உள்ளிட்டவற்றை சாப்பிடுமாறும் கூறியுள்ளார்.ஹர்ஷ வர்தனின் இந்த பதிவு, ஒருபுறம் ஏழை மக்களை கேலி செய்யும் அதேநேரத்தில், மற்றொரு புறம் கறுப்பு சாக்லேட்டின் மருத்துவ குணம்குறித்த சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.கறுப்பு சாக்லேட் குறித்த மத்திய அமைச்சரின் கருத்திற்கு ஆதாரம் இருக்கிறதா? என்று உயிர்வேதியியல் ஆராய்ச்சியாளரான அனந்த் பன் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா தொற்றுக்கு, கார்ப்பரேட் சாமியார் ராம்தேவின் பதஞ்சலிநிறுவனத் தயாரிப்பான ‘கொரோனில்’ என்ற மாத்திரையைப் பரிந்துரைந்து, பல்வேறு தரப்பினரின் கண்டனங்களுக்கு உள்ளானவர்தான் மத்தியஅமைச்சர் ஹர்ஷவர்தன் என்பது குறிப்பிடத்தக்கது.

;