india

img

கொரோனாவால் 270 மருத்துவர்கள் பலி....

புதுதில்லி:
தொற்றுநோயின் இரண்டாவது அலைகளில் 270 மருத்துவர்கள் இறந்துவிட்டனர் என இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக செவ்வாயன்று வெளியான அறிக்கை:-

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் சிக்கி இதுவரை நாடுமுழுவதும் 270 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் ஐ.எம்.ஏ., முன்னாள் தலைவரும் பிரபல மருத்துவரான கே.கே.அகர்வால் உயிரிழந்துள்ளார். மிக இளவயதில் புதுதில்லி ஜி.டி.பி., மருத்துவமனையில் பணியாற்றிய 25 வயது அனாஸ் முஜாகித் கடந்த 9-ஆம் தேதி கொரோனா தொற்றால் உயிரிழந்தார். மருத்துவர்களில் உயிரிழந்தவர்களில் வயதானவர்களில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர் மருத்துவர் சத்தியமூர்த்தி  90 வயதில் உயிரிழந்தார்.

அதிகபட்சமாக பீகார் மாநிலத்தில் 78 மருத்துவர்கள் இதுவரை கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் 37, புதுதில்லியில் 29, ஆந்திராவில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா முதல் அலையில் 748 மருத்துவர்கள் உயிரிழந்த நிலையில் 2வது அலை முடிவதற்குள் 270 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலான மருத்துவர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

;