india

img

கொரோனா பரோலில் போன 3,468 கைதிகளை காணவில்லை..... தீவிரமாகத் தேடும் திஹார் சிறை நிர்வாகம்...

புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருந்த போது, சிறைவாசிகளை பரோலில் விடுவிக்க மத்திய அரசு முடிவெடுத்தது. 

இதன்படி, ஆசியாவின் மிகப்பெரிய சிறை வளாகங்களில் ஒன்றான திஹார் சிறையில் இருந்து மட்டும் 6 ஆயிரத்து 740 சிறைவாசிகள் கொரோனா பரோலில் விடுவிக்கப்பட்டனர்.எச்.ஐ.வி., புற்றுநோய், டயாலிசிஸ் தேவைப்படும் சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள், ஹெபடைடிஸ் ஈ, சி, ஆஸ்துமா, காசநோய் போன்ற நோய்களால்பாதிக்கப்பட்ட சிறைவாசிகளேபெரும்பாலும் விடுவிக்கப் பட்டனர். இதில், பரோல் காலம் முடிவடைந்து, 3 ஆயிரத்து 272 பேர்சிறைக்கு திரும்பிவிட்ட நிலையில், 3 ஆயிரத்து 468 பேர் இன்னும் சிறைக்குத் திரும்பவில்லை என்ற தகவல் தற்போதுதெரியவந்துள்ளது.தில்லியின் மண்டோலி, ரோஹினி பகுதிகளில் உள்ள சிறைகளில் இருந்தும், 1,184 சிறைவாசிகள் பரோலில் விடுவிக்கப்பட்டு இருந்தனர். அவர் கள் அனைவரும் 2021 பிப்ரவரி 7 முதல் மார்ச் 6-ஆம் தேதிக்குள் சிறைக்கு திரும்ப வேண்டும் எனஉத்தரவிடப்பட்டிருந்த நிலையில், இதிலும் 1072 பேர் மட்டுமேசிறைக்குத் திரும்பினர். 112 பேரை காணவில்லை. சிறைக்கு திரும்பாதவர் களின் குடும்பங்களை அணுகிய போது, அவர்கள் வீடுகளுக்கே வரவில்லை என்று சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது, சிறை நிர்வாகங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சிறை திரும்பாதவர்களை தேடிக் கண்டுபிடிக்க தில்லி காவல்துறையின் உதவியை திஹார் சிறை நிர்வாகம் நாடியுள்ளது.

;