india

img

கொரோனா ஊரடங்கால் வேலையிழப்பு.... அடுத்த ஆண்டு வரை தொழிலாளருக்கான பி.எப். தொகையை ஒன்றிய அரசு செலுத்தும்... நிதி அமைச்சர் தகவல்....

புதுதில்லி:
கொரோனா ஊரடங்கு நடவடிக்கை யால் வேலையிழந்த பணியாளர்களின் பிஎப் பங்களிப்பு தொகையை அடுத்த ஆண்டு (2022) வரை ஒன்றிய அரசு செலுத்தும் என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதுகுறித்து நிதியமைச்சர் கூறுகையில், இபிஎப்ஓ-வில் பதிவு செய்த தொழில் நிறுவனங்களில் வேலை இழந்தவர்களின் பி.எப். பங்களிப்புத் தொகை மற்றும் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு இரண்டையும் சேர்த்து ஒன்றிய அரசு செலுத்தும். அவர்கள் மீண்டும் பணியில்சேர்த்துக் கொள்ளப்படும் வரை இந்த பங்களிப்பு தொடரும். அதிகபட்சம் அடுத்தஆண்டு வரை இது வழங்கப்படும். வேலையிழந்த புலம் பெயர் தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாவட்டத்தில் வேறு பணிகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்கிறது. ஒன்றிய அரசின் 16 வகையான தொழில் திட்டங்களின் மூலம் அவர்கள் வேலை வாய்ப்பைப் பெறலாம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை வழங்கும்நாட்களின் எண்ணிக்கையை 2020 ஆம்ஆண்டு அதிகரித்து அதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.60 ஆயிரம் கோடி தொகை கொரோனா காலத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது என்று தெரிவித்தார்.

;