india

மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கவில்லை... 1 ஆம் பக்கத் தொடர்ச்சி....

 1 ஆம் பக்கத் தொடர்ச்சி.. 

அணையை கட்டக்கூடாதுஎன சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக ஒன்றிய அமைச்சரிடம் பேசினோம். மேகதாதுஅணையை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் கர்நாடகாவுக்கு இல்லை என்று ஒன்றியஅமைச்சர் கூறினார். மேகதாது அணைக்கு அனுமதி தரக்கூடாது என ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினோம். கர்நாடகஅரசின் விரிவான திட்ட அறிக்கையை ஏற்க மாட்டோம்.கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு துணை போகக் கூடாது என்று அழுத்தமாக வலியுறுத்தினோம்.காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணைக்குஅனுமதி வழங்கப்பட மாட்டாது. மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஒன்றிய அரசு துணை போகக்கூடாது என வலியுறுத்தினோம் என்று தெரிவித்தார்.

கே.பாலகிருஷ்ணன்
அனைத்துக் கட்சி குழுஒன்றிய அமைச்சரை சந் தித்து பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான டிபிஆர் அறிக்கை தயாரிக்க நீர்வளக் குழு அனுமதியளித்ததே தவறுஎன வலுவாக எடுத்துரைக்கப்பட்டது. அதற்கு அமைச்சர் அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதி அளிக்கவில்லை. காவிரி நதிநீர் ஆணையம் மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதி பெற வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளோம். ஆனால் இதுவரை அணை கட்ட அனுமதி வழங்கவில்லை என்றார்.நீர்வளக் குழு அனுமதிகொடுத்ததே விதிமுறைகளுக்கும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் எதிரானது எனகே.பாலகிருஷ்ணன் கூறினார்.

;