india

img

வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் பேரணி...

மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில்காங்கிரஸ் கட்சியினர் சார்பில் வெள்ளிக்கிழமையன்று பேரணி நடைபெற்றது. 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்குஎதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தில்லி துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு பேரணியாக சென்று முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் கட்சியினர் அறிவித்திருந்தனர். அதன்படி வெள்ளியன்று நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர்  ராகுல் காந்தி,பிரியங்கா காந்தி உள்ளிட்டோர்பங்கேற்றனர்.  பேரணிக்குப் பிறகு ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு உதவுவதற்காக கொண்டுவரப்படவில்லை. அவர்களை ஒழிப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது.பாஜக அரசு கண்டிப்பாக இந்தச் சட்டங்களைவாபஸ் பெற வேண்டும். வேளாண் சட்டங் களை திரும்பப் பெறும் வரை காங்கிரஸ் கட்சி ஓயாது என்று தெரிவித்தார். 
 

;