india

img

எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம்....

புதுதில்லி:
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமையன்று எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கம் எழுப்பினர். இதுகுறித்து விவாதம் நடத்த மோடி அரசு மறுத்துவிட்டது. பெட்ரோல்,டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையானது மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் வரலாறுகாணாத வகையில் அதிகரித்தது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். ஆனால் இதைப்பற்றியெல்லாம் மோடி கவலைப்படாமல், அம்பானி,அதானி உள்ளிட்ட பெரும்முதலாளிகளுக்கு சலுகைகள் தருவதற்கே தீவிரமாக பணியாற்றுகிறார் என்று எதிர்க்கட்சியினரும் மக்களும் கடுமையாகச் சாடுகின்றனர். 

இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது  அமர்வு திங்களன்று தொடங்கியது. செவ்வாயன்று மாநிலங்களவை  கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து  முழக்கம் எழுப்பினர். இதுபோலவே மக்களவையிலும் எதிர்க்கட்சிகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். இதற்கு பதிலளிக்காமல்  அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

;