india

தேசிய மகளிர் ஆணைய தலைவியை... 1ஆம் பக்கத் தொடர்ச்சி....

 1ஆம் பக்கத் தொடர்ச்சி...

பதுவான் சிறப்புக் காவல் கண்காணிப்பாளர், தானா காவல்துறையினர் வழக்கை விசாரணை செய்து வருவதாகக் கூறியிருக்கிறார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்கள் உணவுக்காகவும் வேலைக்காகவும் அமைதியான முறையில் போராடுவதைத் தடுத்திடும் அதே சமயத்தில் இதுபோன்று கொடூரமான குற்றங்கள் நடப்பது வெட்ககரமானதாகும்.அதிலும் கோவில் பூசாரியும் அவர்தம் அடியாட்களும் இச்சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக மாறியிருப்பது மிகவும் வெட்கக் கேடாகும். பிரதானமாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பூசாரி உட்பட அனைவரும் கைதுசெய்யப்பட்டு, முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு உரிய நீதி விரைந்து கிடைத்திட வேண்டும். பாஜக ஆட்சியில் பெண்கள் மீது இழைக்கப்படும் அட்டூழியங்கள் குறித்து அனைவரும் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

குற்றவாளிகளுக்கு ஆதரவாக... 
பதுவானில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட அங்கன்வாடி ஊழியரின் இல்லத்திற்குச் சென்றுள்ள தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவியான சந்திரமுகி தேவி, பாதிப்புக்கு உள்ளான பெண் தாமாகவே அவ்வாறு கோவிலுக்குச் செல்லாமல் இருந்திருந்தாலும்,  தன்னுடன் தன் குடும்பத்தைச் சேர்ந்த ஆண் எவருடனாவது சென்றிருந்தாலும் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்காது என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். பெண்களின் உரிமைகளை உயர்த்திப் பிடிக்க வேண்டிய  தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி, குற்றமிழைத்த கிரிமினல்களின் நடவடிக்கைகளைக் கண்டிக்காது, அவர்களை மன்னிக்கும் விதத்தில் நிலை எடுத்திருப்பதும், பழியை பாதிப்புக்கு உள்ளான பெண் மீதே போட்டிருப்பதும் அதன்மூலம் பெண்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமற்ற நிலையில் ஆட்சியை நடத்தி வரும்  யோகிஆதித்யநாத் ஆட்சிக்கு வக்காலத்து வாங்கியிருப்பதும் மிகவும் வெட்கக்கேடாகும்.இவ்வாறு தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவியாக இருக்கின்ற பெண்மணியே, நிலப்பிரபுத்துவ மற்றும் ஆணாதிக்க சிந்தனையைப் பிரச்சாரம் செய்வது அதிர்ச்சியளிக்கிறது. இந்த நபர், தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று
நாங்கள் கோருகிறோம்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ந.நி.)

;