india

img

இளைஞர்களைக் கைவிடுகிறது மத்திய அரசு.... மருந்து கம்பெனிகளுக்காக தடுப்பூசி கொள்கையில் மாற்றம்....

புதுதில்லி:
இதுவரை நமதுநாடு பின்பற்றிய உலகளாவிய தடுப்பூசி கொள்கை, மருந்து நிறுவனங்களின் நலனுக்காக மத்திய அரசால் தியாகம் செய்யப்பட்டுள்ளது. கோவிட் தடுப்பூசி 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு தனியார் மூலம் வழங்கப்பட்டால் போதும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதன் பொருள் இளைஞர்கள் அதிக விலைகொடுத்து தடுப்பூசி போட வேண்டும் என்பதாகும். மே 1 ஆம் தேதி முதல் முதல் புதிய தடுப்பூசி கொள்கையின் ஒரு பகுதியாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி அமைந்துள்ளது. அரசு மையங்களில் 18 முதல் 45 வயதுடையவர்களுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்பட வேண்டுமானால், அந்தந்த மாநில அரசுகள் தனியாக முடிவு எடுக்க வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து தனியார் மற்றும் அரசு மையங்களில் தடுப்பூசி பெறலாம்.

தடுப்பூசி தயாரிப்பாளர்கள் கொள்ளை லாபத்தை ஈட்டுவதற்காக தடுப்பூசியை தனிப் பட்ட முறையில் விற்க அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய அரசின் விவாதத்துக்குரிய இந்தஉத்தரவு வந்துள்ளது. 18 வயது முதல் 45 வயதுடையவர்கள் தடுப்பூசிக்கு எவ்வாறு பதிவு செய்யலாம் என்பதை விளக்கும் சுகாதார அமைச்சரின் ட்வீட் தனியார் தடுப்பூசி மையங்களில் மட்டுமேதடுப்பூசி கிடைக்கும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.கோவிஷீல்ட் தடுப்பூசியை சீரம் நிறுவனம் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 க்கும், கோவாக்சினை பாரத் பயோடெக் ரூ.1,200க்கும் விற்கின்றன. மாநிலங்களுக்கு கோவிஷீல்ட் ரூ.400க்கும், கோவாசின் ரூ.600க்கும் வழங்கப்படும். இந்தியாவால் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கோவாக்ஸ், கோவிஷீல்ட்டை விடவிலை அதிகம்.

இளைஞர்களுக்காக மாநிலங்களுக்கு நேரடியாக தடுப்பூசியை எப்போது வழங்க முடியும் என்பதில் நிச்சயமற்ற நிலை உள்ளது.பல மாநிலங்கள் தடுப்பூசிக்கான ஆர்டர்களைகொடுத்துள்ளன, ஆனால் உற்பத்தியாளர் களிடமிருந்து நேர்மறையான பதில் எதுவும் கிடைக்கவில்லை. மே 15 வரை மத்திய அரசின்விநியோகத்திற்கான தடுப்பூசி மட்டுமே தயாரிக்கப்படும் என்று சீரம் நிறுவனம் ராஜஸ்தான் அரசுக்கு தெரிவித்துள்ளது. இதன் மூலம் மே 1 முதல், இளைஞர்களுக்கு தடுப்பூசிகளை மாநிலங்களால் பெற முடியாது என்பது தெளிவாகியது.

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசியில் பாதியை விருப்பப்படி விற்க மத்திய அரசுஅனுமதிக்கிறது. மற்ற பாதியை குறைந்த விலையில் மத்திய அரசு வாங்கும். தடுப்பூசியை மத்தியஅரசு கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என்கிற கேரளம் உள்ளிட்ட மாநிலங்களின் கோரிக்கையை மோடி அரசு கருத்தில் கொள்ளவில்லை.

;